ஆத்தா! அதிமுக ஜெயிக்கணும்! சமயபுரம் கோயிலில் தீச்சட்டி எடுத்த கஞ்சா கருப்பு! அப்புறம்தான் ஹைலைட்டே!
திருச்சி: வரும் லோக்சபா தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அஇஅதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில், நடிகர் கஞ்சா கருப்பு தனது குடும்பத்தினருடன் தீச்சட்டி ஏந்தி வழிபாடு நடத்தினார்.
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் 4 முனை போட்டி நிலவுகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் கூட்டணியே அமைக்காமல் தமிழகத்தில் 39 இடங்களையும் அதிமுக வென்றது. இதைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 38 இடங்களிலும் வென்றது.
அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக ஆகிய கட்சிகள் கடும் போட்டி போட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற வேண்டும் என நடிகர் கஞ்சா கருப்பு வேண்டிக் கொண்டார்.
அவர் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வந்து தனது குடும்பத்தினருடன் தீச்சட்டி எடுத்து வழிபட்டார். அதிகாலையில் வெற்றிப் பாக்கு, தேங்காய் பழத்துடன் அக்னிச் சட்டிக்கு பூஜை போடப்பட்டது. உடுக்கை சப்தத்துடன் பம்பை அடிக்கப்பட்டது. இதனால் கஞ்சா கருப்புடன் வந்த உறவினருக்கு அருள் வந்தது.
இதையடுத்து கையில் தீச்சட்டியுடன் கோயிலை கஞ்சா கருப்பு சுற்றி வந்தார். அப்போது சன்னதியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற வேண்டும் என தனது வேண்டுதலை அம்மனிடம் கோரிக்கையாக வைத்தார். இதையடுத்து கஞ்சா கருப்பு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் காமெடி செய்றவங்க செய்துகிட்டே இருக்கட்டும், ஜெயிக்கிறவங்க ஜெயிச்சிட்டுகிட்டேதான் இருப்பாங்க என்றார். அப்போது அவரிடம் மத்தியில் யார் ஜெயிப்பார்கள் என கேட்டதற்கு கஞ்சா கருப்பு அதிமுகதான் என சொன்னார். இதை கேட்ட செய்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் இந்தியா முழுவதும் 275 க்கு மேற்பட்ட இடங்களில் வெல்ல வேண்டும். ஆனால் அதிமுகவும் கூட்டணி கட்சிகளும் போட்டியிடுவது வெறும் 40 இடங்களில்தான் என்பதை கூற அறியாமல் அவர் அதிமுக ஆட்சி மத்தியில் அமையும் என வெள்ளந்தியாக கூறியதாகவே பார்க்கப்படுகிறது.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications