கரூர் எம்பி ஜோதிமணி கொரோனா தடுப்புக்காக, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு
திருச்சி: கரூர் லோக்சபா தொகுதி எம்பி ஜோதிமணி கொரோனா தடுப்பு பணிகளுக்காக, திருச்சி மாவட்டம் மணப்பாறை தலைமை மருத்துவமனைக்கு ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
மணப்பாறையில் நகராட்சி சார்பில் நகா் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டிலிருந்து வந்த 20 புதிய நபா்கள் மருத்துவக் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளனா்.

கரூா் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை சட்டசபை தொகுதியில் உள்ள மணப்பாறை தலைமை மருத்துவமனைக்கு கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகளுக்காக கருா் லோக்சபா தொகுதி எம்பி செ. ஜோதிமணி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்
Recommended Video
மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட 5 வார்டுகளில் வியாழக்கிழமை 12 தூய்மைப் பணியாளா்கள் சுமார் 200 லிட்டா் கிருமி நாசினிகளை தெளித்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சந்தோஷ், நகராட்சி சுகாதார அலுவலா் நெடுமாறன் ஆகியோர் தலைமையில் வெளிநாட்டிலிருந்து வீடு திரும்பிய 20 பேரின் வீடுகள் அடையாளம் காணப்பட்டு வியாழக்கிழமை முதல் மருத்துவக் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டனா்.












Click it and Unblock the Notifications