அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 உரிமைத் தொகை- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
திருச்சி: ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார்.
Recommended Video

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதையொட்டி திருச்சியின் சிறுகனூரில் திமுக சார்பில் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்களை ஸ்டாலின் வெளியிட்டார். அவர் கூறுகையில் பொருளாதாரம், வேளாண்மை, நீர் வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நக்ரப்புற வளர்ச்சி, ஊரக உட்கமைப்பு, சமூக நீதி ஆகிய அழைத்தும் முக்கியமானவை.

30 சதவீதம் இடஒதுக்கீடு
இந்த 7 துறைகளையும் சீரமைப்பதே எனது முதல் பணி. திமுக ஆட்சியில் சமூகநீதியின் கீழ் பெண்களுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதை நீங்கள் நன்று அறிவீர்கள். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, வேலைவாய்ப்பில் 30 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.

மகளிர் தினம்
அந்த வகையில் நாளை மார்ச் 8 மகளிர் தினத்தையொட்டி ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிடுகிறேன். நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். தமிழகத்தில் ரேஷன் பொருள்கள் வாங்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படும்.

ரேஷன் அட்டை
இதன் மூலம் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் அனைவரும் பயன்பெறுவர். பட்டியலினத்தவர், பழங்குடியினர், மிகவும் பிறபடுத்தப்பட்டோருக்கான கல்வி உதவித்தொகை 2 மடங்காக உயர்த்தப்படும். மனித கழிவுகளை மனிதரே சுத்த்ம செய்யும் நிலை ஒழிக்கப்படும்.

திமுக ஆட்சி
முழுவதும் தொழில்நுடப் இயந்திரம் கொண்டே செயல்படுத்தப்படும். இந்த திட்டங்கள் அனைத்தும் 2031 வரை திமுக ஆட்சி நீடித்தால் மட்டுமே செய்ய முடியும். இதோடு நிறைய மக்களுக்கான திட்டங்களும் ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்தப்படும் என்றார் ஸ்டாலின்.
-
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications