வாவ்.. சினிமா பாணியில் சேஸிங்.. ஹீரோ போல் கார் மீது ஏறி லாரி திருடனுடன் சண்டையிட்ட மணப்பாறை போலீஸ்!
திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அரிசி ஆலையிலிருந்து புதிய லாரி கடத்தியதை அடுத்து அந்த லாரியை கடத்திய நபரை போலீஸார் சினிமா பாணியில் விரட்டி பிடித்து கைது செய்தனர்.
Recommended Video
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரிசி ஆலை நடத்துபவர் முத்தபுடையான்பட்டியைச் சேர்ந்த நாகப்பன் (47). இவர் தனது ஆலையில் நிறுத்தியிருந்த புதிய லாரியை திடீரென
காணவில்லை என புகார் தெரிவித்தார்.
திருடப்பட்ட லாரி விராலிமலை பகுதியில் உள்ள பூதக்குடி சுங்கச் சாவடியை கடந்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

ஆலை நிர்வாகிகள்
இதைத் தொடர்ந்து மணப்பாறை போலீஸார் உதவியுடன் அரிசி ஆலை நிர்வாகிகள் லாரியை பின் தொடர்ந்தனர். இதற்கிடையே திருச்சி நகர் பகுதியான தாராநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே சென்ற லாரி ஒரு காரின் மீது மோதி நின்றது.

சுற்றி வளைப்பு
உடனே போலீஸார் அந்த லாரியை சுற்றி வளைத்தனர். லாரி டிரைவர் லாரியை எடுத்துச் செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த காரின் மீது சினிமா பாணியில் ஏறி நின்ற போலீஸ்காரர், அந்த லாரியை திருடியவரின் சட்டையை பிடித்து இழுத்தார். கிளீனர் உட்காரும் வழியில் மற்றொரு போலீஸார் ஏறினர்.

லாரி மீட்பு
இதனிடையே போலீஸாரையே அந்த நபர் தாக்க முயன்றார். எட்டி உதைக்க முயன்றார். பின்னர் லாரியின் டோரை கீழிருந்து ஒருவர் திறந்த போது அலேக்காக சட்டையுடன் அந்த நபரை இழுத்து போலீஸார் தாக்கினர். பின்னர் இந்த லாரி மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விசாரணை
லாரியை திருடியதாக திருச்சி மேலகல்கண்டார்கோட்டை பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகன் பிச்சைமணியை (43) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா பாணியில் சேஸிங் காட்சி, கார் மீது ஏறி சண்டை காட்சிகள் மணப்பாறையே ஷூட்டிங் ஸ்பாட் போல் இருந்தது.
-
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications