தலைமுடியை அறுத்து.. மனைவியை அடித்து துன்புறுத்திய கணவர் கைது.. மாமனார், மாமியாருக்கு வலைவீச்சு!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: சமயபுரத்தில் மனைவியை வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய கணவரின் தாய் மற்றும் தந்தை இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் நரசிங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவஞானம். இவரது மனைவி தமிழ்ச்செல்வி.

2 ஆண்டுகள்

2 ஆண்டுகள்

இவர்களது மகன் பாரத்(34). இவர் சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அலுவலக பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சாவித்திரி என்ற பெண்னுடன் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது.

வரதட்சணை கொடுமை

வரதட்சணை கொடுமை

இவர்களுக்கு 9 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. திருமணம் செய்தது முதல் பாரத் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் மாமனார், மாமியார் ஆகிய மூவரும் தொடர்ந்து கொடுமை செய்து வந்துள்ளனர். இவர்களின் கொடுமையின் உச்சம் நாளுக்கு, நாள் அதிகரித்தது. ஆனால் ''கல்யாணம் செய்து விட்டோம். இது தெரிந்தால் நமது வீட்டிலும் வருத்தப்படுவார்கள். கணவர், மாமியார் என்றாவது ஒருநாள் திருந்தி விடுவார்கள்'' என்று இந்த கொடுமையை சாவித்ரி சகித்து கொண்டு வந்ததாக கூறப்படுகிறது;.

தலைமுடியை அறுத்தனர்

தலைமுடியை அறுத்தனர்

ஆனால் சாவித்திரியின் கணவர் மற்றும் மானார், மாமியார் திருந்துவதாக தெரியவில்லை. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சாவித்திரியை கணவர், மாமனார், மாமியார் மூவரும் சேர்ந்து வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தி இருக்கின்றனர். சாவித்திரி தலைமுடியை அரிவாளால் அறுத்தும், அடித்து கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதில் சாவித்ரி காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

கைது செய்தனர்

கைது செய்தனர்

இதனை தொடர்ந்து இது குறித்து சாவித்திரி லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கணவர் மற்றும் மாமனார், மாமியார் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கணவர் பாரத்தை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமைறைவாக இருக்கும் அவரது தாய் மற்றும் தந்தை இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+