செம கூட்டம்.. "லாக்டவுனுக்கே" பூட்டு போட்ட போலீஸார்!.. திருச்சியில் பரபரப்பு!
திருச்சி: திருச்சி அருகே 50 பைசாவுக்கு டிசர்ட் வாங்க குவிந்த இளைஞர்களால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து ஷோரூமை காவல்துறையினர் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் அருகேயுள்ள சின்னக்கடை வீதியில் புதிதாக ஆண்களுக்கான "லாக் டவுன்" என்ற பெயரில் ரெடிமேடு
ஷோரூம் ஒன்று திறப்பு விழா நடைபெற்றது.
புதிதாக துவங்கும் இந்த ரெடிமேட் ஷோரூம் விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் அதன் உரிமையாளர் திறப்பு விழாவை முன்னிட்டு 50 பைசாவுக்கு காலை 9 மணி முதல் 1 மணி வரை மட்டுமே டி.சர்ட் தருவதாக விளம்பரம் செய்திருந்தார்.

இளைஞர்கள்
இந்த விளம்பரத்தை கண்ட இளைஞர்கள் மற்றும் பெண்களும் கடை திறப்பதற்கு முன்பே அதிகளவில் குவிந்தனர். இதைத் தொடர்ந்து ஷோரூமின் உரிமையாளர் 50 பைசா வாங்கிக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு டோக்கன்களை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது இந்த டோக்கனை வாங்க கூட்டம் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்

பொதுமக்கள்
இதன் காரணமாக அப்பகுதியில் இரு சக்கர வாகனங்களும், பொதுமக்களும் அதிக அளவில் கூடியதால் சின்னக்கடை வீதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த மணப்பாறை காவல்துறையினர் விரைந்து சென்று ஷோரூமின் உரிமையாளரிடம் உரிய அனுமதி பெறாமல் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் கூட்டத்தை கூட்டியதாக கூறி எச்சரித்து கடையை மூடினார்.

நிஜ லாக்டவுன்
பின்னர் காவல் துறையினர் பொதுமக்களை கலைந்து போகக் கூறி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. "லாக்டவுன்" பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கடையை விளம்பரப்படுத்த எண்ணி அதிரடி சலுகையை அறிவித்த நிலையில் திறப்பு விழா அன்றே காவல்துறையினர் முழு லாக்டவுன் செய்துவிட்டனரே என கடை உரிமையாளர் புலம்ப ஆரம்பித்து விட்டார்.

3ஆவது அலை
கொரோனா 3-ஆவது அலை பரவ தயாராகி வரும் நிலையில் தேவையற்ற கூட்டங்களை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுறுத்தி வருகிறார்கள். ஆனால் இது போல் சிலர் கடை விளம்பரம், லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செய்வதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்படுகிறது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications