எனது சேனலை முடக்குறீங்களா.. தீக்குளிப்பேன்.. நூறு பேருடன் 'அதுக்கு' தயார்.. ரவுடி பேபி சூர்யா
திருச்சி : ஆபாச பதிவு வெளியிடுவதாக எனது சேனலை முடக்குறீங்களா... முடக்குங்க.... நான் தவறான பாதைக்கு போவேன்.. ... நூறு பேருடன் 'அதுக்கு' தயார்... என் மேல விபச்சார கேஸ் போட்டா தீக்குளிப்பேன் என ரவுடி பேபி சூர்யா வீடியோ வெளியிட்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது,
ஆபாச பதிவுகள் மூலம் மக்களின் கவனத்தை திசை திருப்பி பணம் சம்பாதிப்பதாக ரவுடி பேபி சூர்யா, இலக்கியா, சாதானா, சிக்கந்தர் உள்ளிட்ட சில யூடியூபர்கள் மீது புகார்கள் எழுந்துள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது,
அதன்படி தமிழக போலீசார், ஆபாசமாக பதிவிடும் பிரபலங்களின் பட்டியலை தயாரித்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி யூடியூப் சேனல்களை முடக்கும் பணிகளை தொடங்கி உள்ளனர். இந்நிலையயில் ஆபாச பதிவு வெளியிடுவதாக என் சேனலை முடக்கினால் தீக்குளிப்பேன் என ரவுடி பேபி சூர்யா மிரட்டி உள்ளார்.

யூடியூப் வீடியோக்கள்
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. மாணவர்கள் ஆன்லைனில் தான் கல்வி கற்கிறார். மாணவர்கள் இதனால் ஆன்லைனில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் , மாணவிகள் ஆன்லைனில் அதிக நேரம் இருப்பதால் பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வரும் வீடியோக்களை பார்க்கிறார்கள்,

ஆபாச இணையதளங்கள்
அப்படி பார்க்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களை கவரும் வகையில் தங்களது ஆபாச பேச்சுக்கள் மற்றும் செய்கைகள் , உடைகள் மூலம் கவரும் சில யூடியூப் பிரபலங்கள், பணம் சம்பாதிக்கும் அருவருக்கத்தக்க வகையிலும் பல வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் ஆபாச இணையதளங்களை முடக்க காவல்துறை நடவடிக்கையை தொடங்கி உள்ளது.

மிரட்டல் வீடியோ
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்தவர் ரவுடி பேபி என அழைக்கப்படும் டிக்டாக் புகழ் சூர்யா (32) , இவர் திருப்பூரில் வசிக்கிறார். இவரது யூடியூப் சேனலையும் முடக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரவுடி பேபி சூர்யா ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

சூர்யா மிரட்டல்
அதில், ஆபாச வீடியோக்களை வெளியிடும் யூடியூப் சேனலை முடக்க போலீசார் ஆக்சன் எடுக்கிறார்கள். எனது சேனலை முடக்குறீங்களா... முடக்குங்க.... நான் தவறான பாதைக்கு போவேன்.. சத்தியமா போவேன். என் பிள்ளை மேல ஆணையா போவேன்...போவேன்... நூறு பேருடன் 'அதுக்கு' தயார்... என் மேல விபச்சார கேஸ் போட்டா தீக்குளிப்பேன்.. என பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications