சென்னை டூ சேலம் புதிய சாலை.. மோடி அர்ப்பணித்த சேலம்-வாணியம்பாடி சாலையால்.. இவ்வளவு நன்மையா?
திருச்சி: சேலம் -வாணியம்பாடி சாலை பிரதமர் நரேந்திர மோடி இன்று திருச்சியில் நடந்த விழாவில் நாட்டுக்கு அர்பணித்துள்ளார். இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்துள்ளதால், சென்னையில் இருந்து சேலம் செல்வோருக்கு பயண நேரம் கணிசமாக குறையும்.
வாணியம்பாடி செட்டியப்பனூரில் இருந்து சேலம் மாவட்டம் அயோத்திப்பட்டினம் வரை கிட்டத்தட்ட 130 கிலோ மீட்டர், தொலைவுள்ள குறுகிய சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. NH 179A தேசிய நெடுஞ்சாலையான வாணியம்பாடி - சேலம் நான்குவழி சாலை விரிவாக்கத் திட்டம் ரூ. 521 கோடியில் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

130 கி.மீ., தொலைவுள்ள நான்கு வழிச்சாலை 3 கட்டங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் கடந்த 4 வருடங்களாக நடந்து வந்தன. இந்த சாலையைத்தான் பிரதமர் நரேந்திரமோடி நாட்டுக்கு அர்பணித்துள்ளார். இந்த வாணியம்பாடி - சேலம் நான்குவழி சாலையில் பயணித்தால் சென்னையிலிருந்து சேலத்தை 5 மணி நேரத்தில் அடைய முடியும். இத்திட்டம் தருமபுரி மாவட்ட மக்களுக்கு நிச்சயம் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
தர்மபுரி மாவட்டத்தில் சேலம் - திருப்பத்தூர் - வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையை 18 கிமீ தூரத்திற்கு இரண்டு வழிப்பாதையை நான்கு வழிப்பாதையாக விரிவாக்கப்பட இருக்கிறது. இதற்காக மத்திய அரசு ரூ.169.67 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த பணிகள் முடிந்தால் நிச்சயம் சேலம் டூ வாணியம்பாடியை எளிதாக கடக்க முடியும்.
தற்போதைய நிலையில் சேலத்தில் இருந்து சென்னை செல்ல பெரும்பாலும ஆத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலை 347 கிலோ மீட்டர் தூரம் உடையது. இந்த சாலை வழியாக கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், பகுதி மக்கள் சென்னை செல்கிறார்கள். ஏற்கனவே திருச்சி, மதுரை, திருநெல்வேலியில் இருந்து வரும் வாகனங்கள் உளுந்தூர் பேட்டையில் இணைவதால், அதன்பின்னர் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொங்கல், தீபாவளி, வார இறுதி நாட்களில் பயணிப்பது சவாலாக உள்ளது.
இந்நிலையில் சேலத்திலிருந்து சென்னைக்கு செல்ல இன்னொரு வழியும் உள்ளது. சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி சென்று அதன்பின்னர் வளைந்து வாணிம்பாடி , வேலூர், காஞ்சிபுரம் வழியாக பூந்தமல்லியில் இணைந்து நேரடியாக சென்னைக்குள் நுழைய முடியும். ஆனால் இந்த சாலை சுற்றி செல்ல வேண்டியள்ளதால் பலரும் விரும்புவது இல்லை.. அதேநேரம் சேலத்தில் இருந்து அரூர், ஊத்தங்கரை, திருப்பத்தூர், வாணிம்பாடி வழியாக சென்றால் 50 கிமீ தூரம் குறைவு என்றால், பயண நேரமும் கணிசமான நேரம் குறையும் .
இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கியது. கடந்த 5 வருடங்களாக பணிகள் நடந்து வந்த நிலையில் இந்த சாலையை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்பணித்துள்ளார். இனி இந்த சாலை வழியாக சென்னை சென்றால் பயண நேரம் சேலம், கோவை மக்களுக்கு நிச்சயம் கணிசமான அளவில் குறையும். எவ்வளவு நேரம் குறைகிறது என்பதை பயணித்து வந்தவர்கள் சொன்னால் தான் நமக்கு தெரியும். சென்னை டூ சேலம் 5 மணி நேரத்தில் போக முடியும் என்கிறார்கள்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications