திருச்சியில் இருந்து...துபாய் அபுதாபி மலேசியாவுக்கு... செப்டம்பரில் சிறப்பு விமானம்!!
திருச்சி: திருச்சியில் இருந்து துபாய், அபுதாபி, மலேசியா போன்ற நாடுகளுக்கு செப்டம்பர் மாதத்தில் இருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து திருச்சி விமான நிலைய அலுவலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில், வெளிநாடுகளில் இருப்பவர்களை மீட்டு வர, திருச்சி விமான நிலையத்தில் இருந்து, சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்போது, நான்காம் கட்ட தளர்வுகளுடன், செப்டம்பர், 30ம் தேதி வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், அபுதாபி, மலேசியா போன்ற நாடுகளுக்கு, சிறப்பு விமானங்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, செப்டம்பர் மாதம் 2, 8, 10, 17, 18, 24 மற்றும், 26 ஆகிய தேதிகளில், மலேஷிய தலைநகர், கோலாலம்பூருக்கு சிறப்பு விமானம் இயக்கப்பட உள்ளது. அதே தேதிகளில், மறு மார்க்கத்திலும் சிறப்பு விமானம், திருச்சி விமான நிலையத்திற்கு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சியிலிருந்து தோகாவிற்கு செப்டம்பர் 5, 13, 21, 29 ஆகிய தேதிகளில், காலை, 10:05 மணிக்கு புறப்படும் விமானம், மறு மார்க்கமாக மீண்டும் இரவு, 8:00 மணிக்கு திருச்சியை வந்தடையும். வரும் 3, 14, 17, 26, 30 ஆகிய தேதிகளில், திருச்சியில் இருந்து அபுதாபிக்கும், அபுதாபியில் இருந்து திருச்சிக்கும், சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications