கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை செய்ய வாய்ப்பில்லை! உள்ளே வந்தது யார் என விசாரிங்க! வேல்முருகன் காட்டம்
திருச்சி : கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும், அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு வாய்ப்பு இல்லை என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் வேலுமுருகன் கூறியுள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சியில் மாற்றுக் கட்சியில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தங்களை இணைத்துக் கொள்ளும் இணைப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்
வேல்முருகன் கலந்து கொண்டு கட்சியில் இணையும் புதிய உறுப்பினர்களை வாழ்த்தி வரவேற்றார்.

கள்ளக்குறிச்சி சம்பவம்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்," கள்ளக்குறிச்சி சம்பவம் மிகுந்த வருத்தத்தக்கது. இறந்த மாணவி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும். மாவட்ட நிர்வாகம், கல்வி நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றின் மெத்தன போக்கு இதற்கு காரணம். இதை தமிழக முதல்வர் கவனத்தில் கொண்டு வரும் காலங்களில் மேற்கண்ட செயல் எங்கும் நடக்காத வண்ணம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்கொலைக்கு வாய்ப்பில்லை
மேற்கண்ட பள்ளியில் படித்து இறந்து போன என்ற மாணவி நன்றாக படிக்கக் கூடியவர் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தவர் நீட் தேர்வுக்கு ஆயத்தமாகி கொண்டிருந்தவர். அப்படி இருக்கும் பொழுது அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு வாய்ப்பு இல்லை. அந்தப் பள்ளியில் சந்தேகப்படும்படியாக யார் யார் உள்ளே வந்தார்கள் யாருடைய அரசியல் தொடர்பு அவர்களுக்கு இருந்தது வெளியில் இருந்து ஏதேனும் நபர்கள் பள்ளி வளாகத்திற்குள் வந்தார்களா, இவை எல்லாவற்றையும் காவல்துறை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்

அடக்க நினைக்கக் கூடாது
மேற்கண்ட வன்முறை சம்பவத்தை நானும் கண்டிக்கிறேன். ஆனால் தற்பொழுது எடுக்கும் நடவடிக்கையில் இனிமேல் எந்த ஒரு பிரச்சனையிலும் பொது மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் போராடினால் அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்பது போன்று ஒரு மாயை ஏற்படுத்தி அடக்க நினைக்கக் கூடாது. மேற்கண்ட சம்பவத்தில் 17 பிரிவுகளின் மேல் வழக்கு செய்து இருப்பது நல்லது அல்ல.வன்முறை செய்தவர்களை கண்டறிந்து அவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கலாம் பொதுமக்கள் இதில் பாதிக்கக் கூடாது என்பது எனது கருத்து
Recommended Video

தமிழக அரசிற்கே சவால்
தனியார் பள்ளி சங்கங்களைச் சேர்ந்த தலைவர் தமிழக அரசிற்கே சவால் விடுகிறார். ஒருநாள் பள்ளிகள் இயங்காது என்கிறார். எத்தனை பள்ளிகள் அன்று இயங்கவில்லையோ அத்தனை பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இது மிகுந்த வருத்தத்தக்க விஷயம். இதற்கு காரணம் யார் பின்பலம் யார் இருக்கிறார்கள் என்பதை ஆராய வேண்டும். கல்வி மாநில பட்டியலில் இருந்தால்தான் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முடியும் எனவே ஒன்றிய அரசிடம் இருந்து மாநில அரசு அதை பெறுவதற்கான நடவடிக்கை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் சிபிஎஸ்சி மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளை உள்ளே நுழைய முடியாத சூழ்நிலை தான் உள்ளது" என்றார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருவள்ளுவருக்கு காவிச் சாயமா? தமிழர்களின் அடையாளத்தைச் சிதைக்கும் ஆளுநர் - வேல்முருகன் கண்டனம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications