இனிமேல் எந்த ரெளடிகளிடமும் தொடர்பு வச்சுக்க மாட்டேன்.. மன்னிப்பு கேட்கும் தேஜஸ் சுவாமிகள்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: "இனிமேல் எந்த ரெளடிகளிடமும் தொடர்பு வச்சுக்க மாட்டேன். மீண்டும் நான் ஆன்மீக பயணத்தை தொடர போகிறேன். என் செயலால் யார் மனதும் புண்பட்டிருந்தால் என்ன மன்னிச்சிடுங்க" என்று தேஜஸ் சுவாமிகள் மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

திருச்சி மாவட்டம், அல்லித்துறையை அடுத்த கன்னியம்மன் கோயில் அருகில் வசித்துவருபவர் பாலசுப்பிரமணியன் என்கிற தேஜஸ் சுவாமிகள். அவர், தன்னைத் தானே சாமியார் என சொல்லிக்கொண்டு இருந்தார்.

இந்தநிலையில், பாலசுப்பிரமணியனும், திருச்சியிலுள்ள ஒரு வழக்கறிஞரும் பேசிக்கொள்ளும் ஆடியோ கடந்த சில வாரங்களுக்கு முன்பு வைரலாகியது, அதில், தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

 ரௌடிகளுடன் தொடர்பு

ரௌடிகளுடன் தொடர்பு

அதேபோல, உயரதிகாரிகளும் என்னை நாள்தோறும் சந்தித்துவிட்டுச் செல்கிறார்கள், தமிழகத்தில் 42 ரெளடிகள் கொண்ட லிஸ்ட்டை போலீஸார் கையில் எடுத்திருக்கிறார்கள். அதில், டெல்டா மாவட்டங்களில் மட்டும் 12 ரெளடிகள் என்கவுன்ட்டர் லிஸ்ட்டில் இருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் என்கவுன்ட்டர் நடக்கலாம். திருச்சியைச் சேர்ந்த முக்கிய ரெளடிகள் சிலர், என்னை வந்து பார்த்துவிட்டுப் போகிறார்கள்.

சைரன் வைத்த கார்

சைரன் வைத்த கார்

சைரன் வைத்த காரில் சென்று அமைச்சர் சேகர் பாபுவை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன் என்று பேசிய ஆடியோ வைரல் ஆனது. தேஜஸ் சுவாமிகளுக்கும் ரெளடிக்கும் என்ன தொடர்பு... இவர் சாமியாரா இல்லை ரௌடி சாமியாரா என்ற கேள்வி எழுந்தது.

தேஜஸ் சுவாமிகள் கைது

தேஜஸ் சுவாமிகள் கைது

இந்தநிலையில், இந்த ஆடியோ குறித்து திருச்சி போலீஸார் சாமியாரை அழைத்து விசாரித்தனர். இதனிடையே திருச்சியின் பிரபல ரெளடியான கொட்டப்பட்டு ஜெய்யை மிரட்டல் புகார் ஒன்றில் கைது செய்த போலீசார், அவரிடம் விசாரித்தனர். அப்போது ஜெய்,, காவல்துறையினர், அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அல்லித்துறை தேஜஸ் சுவாமிகளுக்கு தெரியும் என்று போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்திருந்தார். அதன் பெயரில் போலீஸார் தேஜஸ் சுவாமிகளைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்

ரெளடிகளிடமும், தொடர்பு

ரெளடிகளிடமும், தொடர்பு

இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த தேஜஸ் சுவாமிகள், இனிமேல் எந்த ரெளடிகளிடமும், தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டேன், மீண்டும் ஆன்மீக பயணத்தை மேற்கொள்ளப் போகிறேன். காவல்துறையினர், அரசு மற்றும் பொது மக்களுக்கு எந்த சிரமமும் ஏற்பட்டிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்" என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+