திருப்பரங்குன்றம் விவகாரத்தை தேசியளவில் கையில் எடுக்கும் ஆர்எஸ்எஸ்? மோகன் பகவத் சொன்ன முக்கிய தகவல்
திருச்சி: ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி சமயபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். அப்போது திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்தும் பேசினார். தமிழ்நாட்டில் உள்ள இந்து அமைப்புகள் இந்த விவகாரத்தை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தில் இந்துக்களுக்குச் சாதகமாகவே முடிவு வரும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் இப்போது சில வாரங்களாகவே திருப்பரங்குன்றம் விவகாரம் முக்கிய விஷயமாக உருவெடுத்துள்ளது. அங்குக் கார்த்திகை தீப நாளன்று உச்சி பிள்ளையார் கோயில் அருகே தான் தீபத்தூண் ஏற்றப்படும். ஆனால், மலை உச்சியில் இருக்கும் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் எனச் சொல்லி ராம ரவிக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மோகன் பகவத்
இதில் மலை உச்சியில் தீபம் ஏற்ற ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், தமிழ்நாடு அரசு இந்தத் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்து முன்னணி உள்ளிட்ட சில அமைப்புகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து இருக்கிறது. இதற்கிடையே திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சில கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் தேசியத் தலைவர் மோகன் பகவத் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியில் சுமார் 1000+ பேர் பங்கேற்றனர். அப்போது தான் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து மோகன் பகவத் பேசினார். திருப்பரங்குன்ற விவகாரத்தைத் தேசியளவில் எடுத்துச் செல்லத் தேவையில்லை என்றும் தமிழகத்திலேயே இதைத் தீர்க்க முடியும் என்றும் மோகன் பகவத் தெரிவித்தார்.
தேசியளவில் திருப்பரங்குன்ற விவகாரம்?
திருப்பரங்குன்ற விவகாரத்தைத் தேசியளவில் எடுத்துச் செல்ல வேண்டுமா என்ற கேள்விக்கு அவர், "திருப்பரங்குன்றம் விவகாரத்தைப் பொறுத்தவரை தேவைப்பட்டால் அதைப் பெரிதாக எடுத்துச் செல்வோம். இந்த விவகாரம் தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது. எனவே, அது அங்கேயே தீர்க்கப்படட்டும் என நம்புகிறேன். தமிழகத்தில் இந்துக்கள் விழிப்புணர்வு பெற்று உள்ளனர். அதுவே இந்த விவகாரத்தில் தீர்வை எட்டப் போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.
இந்து அமைப்புகள்
தமிழ்நாட்டில் இருக்கும் இந்து அமைப்புகளும் இந்த விவகாரத்தில் செயல்பட்டு வருகின்றன.. இதில் எதாவது நடவடிக்கை தேவை என்றால் அவர்கள் எங்கள் கவனத்திற்கு அதைக் கொண்டு வருவார்கள். பின்னர் நாங்கள் அதைப் பற்றி ஆலோசித்து முடிவெடுப்போம்.. தற்போதைய நிலையில், இந்த விவகாரத்தைத் தமிழகத்தில் உள்ள இந்துக்களின் பலத்தின் அடிப்படையில் இங்கேயே தீர்க்க முடியும் என்று நான் நினைக்கிறேன். இப்போதைக்கு இதை நாம் தேசிய அளவில் கொண்டு செல்லத் தேவையில்லை.. ஆனால் ஒன்றை மட்டும் நிச்சயமாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த விவகாரம் இந்துக்களுக்குச் சாதகமாகவே தீர்க்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
யாருக்கு எதிராகவும் இல்லை
அவர் மேலும் பேசுகையில், "ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்டு 100 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. ஆனால், கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக மட்டுமே ஆர்எஸ்எஸ் பேசுபொருளாக மாறியுள்ளது. தவறான புரிதல் காரணமாக இந்தச் சங்கம் குறித்து சிலர் வதந்திகளைப் பரப்பி வருகின்றன. ஆர்எஸ்எஸ் அமைப்பு முஸ்லிம், கிறிஸ்தவர்கள், பிரிட்டிஷார் என யாருக்கும் எதிராக உருவாக்கப்பட்டது கிடையாது. இந்தச் சங்கம் இந்துக்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்துக்காக உருவாக்கப்பட்டது.
தவறான புரிதல் காரணமாகச் சங்கம் குறித்து சில வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இந்தச் சங்கம் என்பது யாருக்கும் எதிராக உருவாக்கப்படவில்லை. குறிப்பாக முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என யாருக்கும் எதிராகவும் உருவாக்கப்பட்ட அமைப்பு இல்லை. இது இந்துக்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்துக்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும்" என்றார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications