சமயபுரம் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் வேன் புகுந்து விபத்து - மூவர் பலி, 6 பேர் படுகாயம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதையாத்திரை சென்ற பக்தர்கள் மீது வேன் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர், 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதையாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது வேன் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர். மணப்பாறை அருகே இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் நோக்கி பாதயாத்திரையாக செல்கின்றனர். இந்நிலையில், திருச்சி மணப்பாறை அருகே இடையபட்டியான் என்ற இடத்தில் சமயபுரம் நோக்கி இன்று காலை பக்தர்கள் சிலர் சாலையோரம் பாத யாத்திரையாக சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, காய்கனி ஏற்றிக்கொண்டு சாலையில் வேகமாக வந்த வேன் திடீரென பாத யாத்திரையாக சென்ற பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இந்த கோர விபத்தில் பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் கல்பட்டி, சீகம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு, 24, எரியோடு பகுதியை சேர்ந்த சேகர், 35 ஒரு பெண் என 3 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பாதையாத்திரை சென்ற பக்தர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications