திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆன்மிக போர்வையில்.. மக்களை பிளவுபடுத்துவதுதானே இவங்க வேலை.. ஒரே போடு போட்ட சேகர்பாபு!

Google Oneindia Tamil News

திருச்சி: ஆன்மிகம் என்கிற ஆயுதத்தைக் கையில் எடுத்து மக்களைப் பிளவுப்படுத்த அரசியல் செய்பவர்களுக்கு எங்களின் செயல்பாடு சந்தேகத்தைத்தான் ஏற்படுத்தும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திருச்சி மலைக்கோட்டை கோவில், மாணிக்க விநாயகர் கோவில், உச்சிப்பிள்ளையார் கோவில்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

8 மணி நேர திக்திக் போராட்டம்.. உபியில் 180 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த.. 4 வயது சிறுவன் மீட்பு8 மணி நேர திக்திக் போராட்டம்.. உபியில் 180 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த.. 4 வயது சிறுவன் மீட்பு

அங்கு செய்யப்பட வேண்டிய பணிகள் என்னென்ன? என்பது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

சந்தேகம் எழுப்புகிறவர்கள்

சந்தேகம் எழுப்புகிறவர்கள்

இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:- இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து சந்தகேம் எழுப்பி வருகின்றனர். இவ்வாறு சந்தேகம் எழுப்புபவர்கள், அரண்டவர்கள் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் என்கிற நிலையில் இருக்கிறார்கள்.

அனைத்து திட்டம்

அனைத்து திட்டம்

ஆன்மிகம் என்கிற ஆயுதத்தைக் கையில் எடுத்து மக்களைப் பிளவுப்படுத்த அரசியல் செய்பவர்களுக்கு எங்களின் செயல்பாடு சந்தேகத்தைத்தான் ஏற்படுத்தும். திட்டத்தை அறிவிக்கும்போது பாராட்டுகிறார்கள். இதனை தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களுக்குப் பின்பு சந்தேகம் எழுப்புகிறார்கள். அறிவிக்கப்படும் திட்டங்கள் வார்த்தை ஜாலங்களுக்காக அல்ல, அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவோம்.

சட்டத்தின்படி செயல்படுகிறோம்

சட்டத்தின்படி செயல்படுகிறோம்

இந்துக்களின் முறை வழிபாடு எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் அறநிலையத்துறை தலையிடலாம் என்கிற சட்டம் இருக்கிறது. அந்தச் சட்டத்தின்படிதான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். தமிழ்நாட்டில் உள்ள 6 அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் புணரமைக்கப்பட்டு புதிய மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படும். அர்ச்சகர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வருவதைப் பொறுத்து வகுப்புகள் தொடங்கப்படும்.

தேர்தல் வாக்குறுதி

தேர்தல் வாக்குறுதி

5 திருக்கோவில்களுக்கு ரோப் கார் வசதி செய்து தரப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்த கோவில்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

English summary
Sekhar Babu, the Minister of Hindu Religious Affairs, said that our activities would cast doubt on those who use the weapon of spirituality to divide the people
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X