• search
திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

103 வயது முதியவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை.. திருச்சி அப்பல்லோ மருத்துவமனை சாதனை

|

திருச்சி : திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனையில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்ட பெரம்பலூர் மாவட்டம் 103 வயது முதிர்ந்த துரைசாமிக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் அருண் கீதாயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த துரைசாமி என்ற 103 வயது முதியவருக்கு கடந்த 50 நாட்களுக்கு முன்பு இடுப்பு மூட்டு முறிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் நடக்க முடியாமலும், வலியாலும் அவதிப்பட்டார். நாட்டு வைத்தியம் செய்து அது பயனற்ற நிலையில் திருச்சிஅப்பல்லோ சிறப்பு மருத்துவமனையை நாடினார்.

 படுக்கைப் புண்கள்

படுக்கைப் புண்கள்

அவருடைய நடக்க இயலாமை மற்றும் வலி அவரையும் அவரைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கு மிகுந்த கவலை மற்றும் வேதனை அளித்தது. இதற்கு முன்னர் மருத்துவ சிகிச்சை பெறாததற்கு வயது முதிர்ச்சியே காரணம் காட்டப்பட்டது. அவரது இடுப்பு முறிவினால் நீண்ட நாள் படுத்த படுக்கையில் இருந்ததால் அவரதுகால் நரம்புகளில் இரத்தக்கட்டு (Deep veinthrombosis) மற்றும் படுக்கைப்புண்கள் ஏற்பட்டு மிகவும் அவதிக்கு உள்ளாகியிருந்தார்.

 கவனிக்க

கவனிக்க

இவருக்கு இருதய சிகிச்சை நிபுணர், பொது மருத்துவர் மற்றும் மயக்க மருத்துவ நிபுணர்களை கொண்ட குழுவினரால் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு அவருக்கு எலும்பு மற்றும் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் அருண்கீதாயன் தலைமையில் வெற்றிகரமாக அரை இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார், இது அவரை விரைவாக நடக்கவைக்க அவசியமானதாக இருந்தது. அறுவை சிகிச்சைக்குப்பின் இவர் உதவியுடன் நடக்கவும் வலியின்றி உட்கார முடிந்தது. இவை இரண்டும் அவரது குடும்பத்தினருக்கு மிகவும் சந்தோசம் மற்றும் பேராறுதலாக இருந்ததோடு அவரை கவனிக்கவும் எளிதாக இருந்தது.

 எலும்பு முறிவு

எலும்பு முறிவு

முதியோருக்கு ஏற்படும் எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்ய வயது ஒரு தடையாக இருக்கிறதா? நிச்சயமாக இல்லை ஏனெனில் இடுப்பு எலும்பு முறிவுகள் மற்றும் பிறபலவீனமான எலும்பு முறிவுகள் (ஆஸ்டியோபோரோசிஸ் காரணமாக) வயதானவர்களுக்கு பொதுவாக ஏற்படுகின்றன. இந்த வயதில் நீடித்தபடுக்கை ஓய்வு, நுரையீரல் நோய்த்தொற்று, சிறுநீர்தொற்று, கால் நரம்புகளில் இரத்த உறைவு மற்றும் படுக்கை புண்கள் போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது. இவைகள் இறுதியில் மரணத்திற்கு கூட வழிவகுக்கும்.

 சிறப்பு மருத்துவமனை

சிறப்பு மருத்துவமனை

திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனையில் இவரைப் போன்ற வயது முதிர்ந்த நோயாளிகளுக்கு மிகச்சிறந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ தொழில் நுட்பவசதிகளை கொண்டு மருத்துவக் குழுவினர்களால் மேற்கத்திய நாடுகளுக்கு இணையான மருத்துவ சிகிச்சை வழங்குகிறோம். நாட்டு வைத்தியத்தில் நேரத்தை செலவிடுவதற்கு பதிலாக எலும்பு முறிவிற்கு பிறகு விரைவில் முறையான மருத்துவ சிகிச்சை தொடங்கப்பட்டால், வயது முதிந்தோர்களுக்கு விரைவில் குணமடைய வாய்ப்பாக அமைகிறது.

சிகிச்சை

சிகிச்சை

இது போன்ற வயதான நோயாளிகளுக்கு இடுப்பு பகுதிக்கு கீழ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பொழுது அந்த பகுதிக்கு மட்டும் மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை செய்வதே பாதுகாப்பான முறையாகும். அப்பல்லோ மருத்துவமனை மதுரை மண்டல தலைமை மருத்துவர் ரோகினிஸ்ரீதர், எலும்பு மற்றும் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் மருத்துவர் அருண்கீதாயன் மற்றும் பாலசுப்ரமணியன் மயக்கவியல் நிபுணர் கார்த்திக், அழகப்பன் மற்றும் திருச்சி அப்போலோ மருத்துவமனை மருத்துவ நிர்வாகி மருத்துவர் சிவம் இருந்தனர்.

விருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,
இன்றே பதிவு செய்யுங்கள்
- பதிவு இலவசம்!

 
 
 
English summary
Trichy Apollo Hospital has done Hip transplantation surgery for 103 elderly man who had been bedded for the past 50 days.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more