தாயுடன் வந்து வேட்பு மனுதாக்கல்.. கையோடு உடல் உறுப்புகளை தானம் செய்த மநீம வேட்பாளர்
திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வீரசக்தி கட்சி தொண்டர்கள் இல்லாமல் தனது தாயுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கல் செய்த கையோடு கமல் பாணியில் உடல் உறுப்பு தானம் செய்து பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதிக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் வீரசக்தி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மருந்து விற்பனை பிரதிநிதியாக தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கிய இவர் இன்று பல (மருத்துவ) ஃபார்மா நிறுவனத்தின் தலைவராக செயலாற்றி வருகிறார்.

இவர் இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் தனது தாயுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கல் செய்த கையோடு கமல் பாணியில் உடல் உறுப்பு தானம் செய்திருக்கிறார். அதன்பின்னரே பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழில் முனைவோர் அணி மாநிலச் செயலாளரான இவர் தொழில் அதிபர் ஆவார். : கமல்ஹாசன் நடிப்பால் ஈா்க்கப்பட்டிருந்தாலும், வெளிப்படையாக நற்பணி மன்றத்திலோ, ரசிகா் மன்றத்திலோ பணியாற்றியது இல்லை. இவர் திருச்சி நகைச்சுவை மன்றம், தண்ணீா் அமைப்பு, சோழ மண்டலத் தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பு, ரோட்டரி சங்கம் உள்ளிட்டவற்றில் பல்வேறு பதவிகளை வகித்தவா். மநீம தொடங்கிய பிறகு, கட்சியில் இணைந்தவருக்கு தொழில் முனைவோா் அணி மாநிலச் செயலா் பதவி வழங்கப்பட்டது. தற்போது, அதே பதவியில் உள்ளார். இவர் திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுகவின் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை எதிர்த்து களம் இறங்கி உள்ளார்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications