"பாப்பா, இந்த அட்ரஸ் எங்கே.." பேச்சு கொடுத்தவாறே திருச்சியில் சிறுமியை கடத்திய வட மாநில கும்பல்!
திருச்சியில் 12 வயது சிறுமியை கடத்த முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் வட மாநில கும்பல் ஒன்று 12 வயது சிறுமியை கடத்திய சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில காலமாக வடமாநிலத்தில் இருந்து பலர் தென் மாநிலங்களுக்கு வருகிறார்கள். குறிப்பாகத் தமிழ்நாட்டிற்கு வேலை தேடிப் பல ஆயிரம் பேர் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.
கட்டிட துறை, ஹோட்டல் துறை உள்ளிட்டவற்றில் தமிழர்கள் பெரியளவில் வேலை பார்க்க ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த துறைகளில் வடமாநிலத்தவரே அதிகம் பணியாற்றுகின்றனர்.

தமிழ்நாடு
இங்கு ஆட்கள் தேவைப்படுவதால் இயல்பாகவே வடமாநிலத்தில் இருந்து வருவோர் தான் அதைப் பூர்த்தி செய்கிறார்கள். உதாரணத்திற்கு நம்ம ஊர் இளைஞர்கள் அதில் ஊதியம் மற்று வேலைவாய்ப்புகளுக்கு எப்படி அரபு நாடுகள், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்கிறார்கள். அதேபோலத் தான் வட மாநிலத்தவர் தங்கள் குடும்பத்தைக் காக்கத் தென் மாநிலங்களுக்கு வருகிறார்கள். வட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இங்கு ஊதியம் அதிகம் என்பதாலேயே முக்கியமாக இங்கு வருகிறார்கள்.

வட மாநிலத்தவர் விவகாரம்
கொரோனா காலத்தில் ஊருக்குத் திரும்பியவர்களும் கூட தங்கள் உறவினர்களையும் சேர்த்து அழைத்துக் கொண்டு இப்போது வருகிறார்கள். உண்மை இப்படியிருக்க வட மாநிலத்தவர் மீது இங்கே தாக்குதல் நடத்தப்படுவதாகப் போலியான வீடியோக்ககள் பரப்பப்பட்டன. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசும் பீகார் அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவே பெரியளவில் பாதிப்புகள் இல்லை. இது ஒரு பக்கம் இருக்க சில வட மாநிலத்தவர்கள் இங்குக் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பரபர சம்பவம்
இதுவரை வட மாநிலத்தவர் எத்தனை பேர் தமிழ்நாடு வந்துள்ளனர் என்பது குறித்து விரிவான டேட்டா இல்லை. டேட்டா இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளும் சில வட மாநிலத்தவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. அதுபோல மோசமான ஒரு சம்பவம் தான் இப்போது திருச்சியில் நடந்துள்ளது. திருச்சியில் சிறுமி ஒருவரை வட மாநில கும்பல் கடத்த முயன்றதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

12 வயது சிறுமி கடத்தல்
திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர், தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வட மாநில கும்பல் ஒன்று அந்த சிறுமியிடம் முகவரி கேட்பது போலக் கேட்டுள்ளனர். எதுவும் அறியாத அந்த சிறுமி அவர்களுக்கு உதவ எப்படிச் செல்ல வேண்டும் என்று விளக்கியுள்ளார். அப்படியே முகவரி கேட்பது போலப் பேச்சுக் கொடுத்த அந்த கும்பல் சிறுமியைக் கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது.

தப்பி வந்த சிறுமி
சிறுமியைக் கடத்திய அந்த கும்பல் தங்கள் காரை சத்திரம் பேருந்து நிலையம் நிறுத்திவிட்டு கூல் டிரிங்க்ஸ் குடிக்க நிறுத்தியுள்ளனர். அப்போது அந்த கும்பலிடம் இருந்து சிறுமி தப்பி வந்துள்ளார். வீட்டிற்கு வந்த அந்த சிறுமி என்ன நடந்தது என்பதைப் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்களின் பெற்றோர், இது குறித்து உடனடியாக போலீசில் புகாரளித்துள்ளனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அதனடிப்படையில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட மூன்று பேரைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications