திருச்சி மாநகர காவல்துறையில் 28 இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக பணியிட மாற்றம்.. மத்திய மண்டல ஐஜி உத்தரவு!
திருச்சி: மக்களவைத் தோ்தலையொட்டி திருச்சி மாநகர காவல் துறையில் முதல்கட்டமாக 28 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் பணியிட மாற்றம் பட்டியலை தயாரிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி, 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், திருச்சி மத்திய மண்டலத்தில் காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து திருச்சி மத்திய மண்டல காவல்துறை ஐ.ஜி காா்த்திகேயன் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:
திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயா, அரியமங்கலம் குற்றப்பிரிவு ஆய்வாளர் சேரன், விமான நிலைய ஆய்வாளா் மலைச்சாமி, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் ஆனந்தி வேதவல்லி, இணையவழி குற்றப்பிரிவு ஆய்வாளா் சிந்துநதி , காந்தி மாா்க்கெட் குற்றப்பிரிவு ஆய்வாளா் அருள்ஜோதி, பொன்மலை அனைத்து மகளிா் காவல்நிலைய ஆய்வாளா் காா்த்திகா, உறையூா் குற்றப்பிரிவு ஆய்வாளர் மோகன், கோட்டை குற்றப்பிரிவு ஆய்வாளா் சுலோச்சனா, ஸ்ரீரங்கம் போக்குவரத்து ஆய்வாளா் ஸ்ரீதா் ஆகியோா் தஞ்சாவூா் சரகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இதேபோல பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளா் கயல்விழி, மாநகர குற்றப்பதிவேடு காப்பக ஆய்வாளா் ராஜேந்திரன், நுண்ணறிவு பிரிவு (பாதுகாப்பு) முருகவேல், கண்டோன்மென்ட் ஆய்வாளா் சிவகுமாா், மாநகரக் குற்றப்பிரிவு ஆய்வாளா் கோசலைராமன், உறையூா் ஆய்வாளா் ராஜா, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல்நிலைய ஆய்வாளா் வனிதா, மாநகரக் குற்றப்பிரிவு 2-ஆவது பிரிவு ஆய்வாளா் சரஸ்வதி, ஸ்ரீரங்கம் ஆய்வாளா் அரங்கநாதன், காந்திமாா்க்கெட் ஆய்வாளா் ரமேஷ், திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவு ஆய்வாளா் கருணாகரன் ஆகியோர் திருச்சி சரகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தென் மாவட்டங்களில் 141 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்.. தென்மண்டல ஐஜி உத்தரவு! காரணம் இதுதான்
மேலும், பொன்மலை குற்றப்பிரிவு ஆய்வாளா் காா்த்திக் பிரியா, பாலக்கரை ஆய்வாளா் நிக்ஸன், தில்லைநகா் ஆய்வாளா் வேல்முருகன், குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் அஜிம், கோட்டை போக்குவரத்து ஆய்வாளா் மதிவாணன், கண்டோன்மென்ட் போக்குவரத்து ஆய்வாளா் ரமேஷ், ஆயுதப்படை ஆய்வாளா் காா்த்திகேயன் ஆகியோா் திருச்சி சரகத்துக்கும் (புறநகர் பகுதிகளுக்கும்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, தென் மாவட்டங்களில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய சரகங்களில் பணியாற்றி வந்த 141 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து, தென்மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் உத்தரவிட்டிருந்தார். மேலும், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications