என் வீட்டு வேலைக்காரப் பொண்ணு கூட ஜம்முன்னு இருக்கும்.. மாணவிகளிடம் அசிங்கமாக பேசிய பேராசிரியர்!
திருச்சி: மேக்கப் போட்டுக் கொண்டு வராத மாணவிகளை திருச்சி பேராசிரியர், நன்றாக மேக்கப் போட்டுக் கொண்டு வரத் தெரியாது? என திருச்சி பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியர் கடுமையாக திட்டுவார் என மாணவிகள் புகார் கூறியுள்ளனர்.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழ்த் துறை தலைவர் பால் சந்திரமோகன். இவர் மீது கல்லூரியின் முதலாம் ஆண்டு முதுகலை மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
அதில் பாடம் நடத்தும்போது மாணவிகளுடன் மிகவும் நெருக்கமாக அமர்ந்து பாடம் நடத்துவார், அப்போது பாலியல் சீண்டல்களையும் செய்வாராம்.

ஆபாசம்
மேலும் மாணவிகளிடம் ஆபாசமாக இரட்டை அர்த்த ஜோக்குகளை கூறி சிரிப்பாராம். மேலும் ஸ்டாஃப் அறைக்கு வர சொல்லி மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபடுவாராம். மேலும் டேபிள்களுக்கு அடியில் மாணவிகளின் கால்களுக்கு இடையே இவரது காலை விட்டு சேட்டை செய்வாராம்.

அறை
சில நேரங்களில் அவர் அணிந்திருக்கும் பேண்டை தளர்த்திக் கொண்டு கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் வருவாராம். அப்போது மாணவிகள் தலையை குனிந்து கொண்டு இருப்பார்களாம். வகுப்பில் மாணவிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் உடனே தனது அறைக்கு வரசொல்லிவிடுவாராம்.

பாலியல் தொல்லை
அங்கு மாணவிகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுப்பாராம். அவ்வாறு அறைக்கு செல்லும் மாணவிகளிடம் "மூஞ்சு ஏன் இப்படி இருக்கு, நல்லா அழகா மேக்கப் போட்டுட்டு வர தெரியாதா. என் வீட்டு வேலைக்காரி கூட சும்மா பவுடர் எல்லாம் போட்டுக்கிட்டு ஜம்முனு இருப்பா, நீயும் இருக்கியே? என திட்டுவாராம்.

முகம் கழுவி
இதுகுறித்து பேராசிரியையாக பணிபுரியும் நளினியிடம் தெரிவித்தால், ஆமாம்மா, ஒரு எச்ஓடியை பார்க்க சென்றால் முகம் கழுவி மேக்கப் போட்டுக் கொண்டுதான் போக வேண்டும். அவர் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என அவரும் கேட்பாராம். இந்த புகாரின் பேரில் அந்த பேராசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications