Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

17 வயதில் கத்தியை தூக்கிய கபடி வீரன்.. 13 வருடங்கள் திருச்சியை அலற விட்ட கொம்பன்.. யார் இந்த ஜெகன்?

Subscribe to Oneindia Tamil

திருச்சி: ஏ பிளஸ் ரவுடி, கேங்ஸ்டர்.. கொம்பன்.. இதெல்லாம் திருச்சி போலீசார் ஜெகனுக்கு வைத்த பெயர்கள் ஆகும். கபடி வீரரான ஜெகன் 17 வயதில் கத்தியை தூக்கி சக கபடி வீரனை தாக்கி சிறை சென்ற நிலையில், 13 வருடமாக கேங்க்ஸ்டர் ஆக திருச்சியை அலற விட்டிருக்கிறார். இவரை பற்றிய அதிர வைக்கும் தகவல்களை இப்போது பார்ப்போம்.

திருச்சி மாவட்டம், சர்க்கார் பாளையம் பனைய குறிச்சியை சேர்ந்த ஜெகன் என்கிற கொம்பன் (வயது 30) பிரபல ரவுடி ஆவார். திருச்சியை மிரட்டி வந்த கொம்பன் என்று அழைக்கப்படும் இவர் மீது திருச்சி மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து உள்பட 53 வழக்குகள் இருக்கின்றன.

Trichy Rowdy Komban Jagan Biography : What did he do from the age of 17 to the age of 30?

இந்த நிலையில் வழக்குகளில் நீதிமன்றங்களில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த கொம்பனை போலீசார் தேடி வந்திருக்கிறார்கள். கடந்த நவம்பர்22ம் தேதி சமயபுரம் அருகே சனமங்கலம் காட்டுப்பகுதிகள் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்-இன்ஸ்பெக்டர் வினோத் தலைமையிலான போலீசார் பிடிக்க முயற்சித்துள்ளனர்.

அப்போது போலீஸ் மீது தாக்குதல் நடத்திய ரவுடி கொம்பனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள். இதில் கொம்பன் ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 17 வயதில் தொடங்கிய ரவுடி வாழ்க்கை 30 வயதில் முடிவுக்கு வந்ததுள்ளது. ஆள் கடத்தல், 5 கொலைகள், பல கொலை முயற்சிகள், அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என சுமார் 53 வழக்கு உள்ள நிலையில், இவர் சுமார் 8 ஆண்டுகளாக சிறையிலும், சிறைக்கு வெளியிலும் ஆளுமை செலுத்தி வந்துள்ளார்.

ஜெகனின் சொந்த ஊர் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சர்க்கார்பாளையத்தை அடுத்த பனையக்குறிச்சி ஆகும். அந்த கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் சரஸ்வதி என்பவருடைய இரண்டாவது மகன் தான் ஜெகன் என்ற ஜெகதீசன். இவர் திருச்சி யுடிவி பள்ளியில் படித்துள்ளார். படித்துக்கொண்டிருந்த போதே சிறந்த கபடி வீரராக ஜெகன் திகழ்ந்திருக்கிறார். 17 வயதில் சக கபடி வீரரை கத்தியை எடுத்து தாக்கியதுடன் அடித்துள்ளார். சிறுவயதிலேயே யாருக்கும் அஞ்சாமல் நண்பர்களுக்காக யார் மீதும் கைவைப்பாராம். அவரது இந்த குணம் அவரை ரவுடியாக மாற்றி இருக்கிறது. ரவுடிகள் குரூப்பிற்காக அடிதடி ஆள்போல் ஆரம்பத்தில் களமிறக்கப்பட்டிருக்கிறார் ஜெகன்.

ஆரம்பத்தில் கொலை முயற்சி வழக்குகள் மட்டுமே தொடர்ந்து பதிவாகி இருந்திருக்கிறது. 17 வயதில் சிறை சென்று திரும்பிய பின்னர் திருச்சியைச் சேர்ந்த பிரபல ரவுடிகளான மணச்சநல்லூர் குணாவின் நட்பு ஜெகனுக்கு கிடைத்துள்ளது. அந்த சூழலில் 2010ம் ஆண்டு கொலை முயற்சியில் சிறைக்கு சென்றுள்ளார். பின்னர் 2011 மற்றும் 2013 ம் ஆண்டு என அடுத்தடுத்து கொலை முயற்சி வழக்குகளில் கைதாவது, பெயிலில் வருவதுமாக இருந்துள்ளார்.

இதனிடையே திருச்சி புத்தூர் சீனிவாச நகரைச்சேர்ந்த கல்லூரி மாணவரை காதல் விவகாரத்தில் தலையிட்டு கொன்றதாக ஜெகனை 2014ம் ஆண்டு போலீசார் கைது செய்துள்ளனர். அதன்பின்னர் 2015ம் ஆண்டு சக்திவேல் என்பவரை கொன்றதாகவும், 20016ல் திருச்சி ரவுடி சந்துருவை கொல்ல முயன்றதாகவும் கைதாகி உள்ளார். ரவுடி சசி, டையூமணி உள்பட 3 பேரை அடுத்தடுத்து கொன்றதாக குண்டாஸில் கைதானார் ஜெகன் என்ற கொம்பன், 2018ம் ஆண்டு ஆள் கடத்தல், கொலை முயற்சி வழக்கிலும். 2019ம் ஆண்டு ஒரு கொலை வழக்கிலும் கைதானார். சேலத்தை சேர்ந்த செல்லத்துரை, தொழில் அதிபர் பங்க் பாபு ஆகியோரை கொன்ற வழக்கிலும் கைதாகி உள்ளார்.

இதனிடையே 2021இல் அரிசி வியாபாரி ஒருவரை கடத்திய வழக்கிலும் கைதானார். மொத்தம் 17 வயது முதல் 30 வயதிற்குள் எட்டு முறை குண்டாஸில் கைதாகி உள்ளார். சிறையில் சுமார் 8 ஆண்டுகள் இருந்துள்ளார். சிறையில் இருந்தபடியே பல சம்பவங்களை செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளது..

கொம்பன் ஜெகன் மீது மொத்தம் 53 வழக்குகள் உள்ள நிலையில், திருச்சி, மதுரை, சென்னை என பல சிறைகளில் இருந்துள்ளார். திருச்சி தன்னுடைய கோட்டை என்று கொக்கரித்தபடி இருந்த ஜெகன், பணத்துக்காக கொலை செய்வது, கூலிப்படையாக செயல்படுவது, ஏரியாவில் மாமூல் வசூலிப்பது, கட்டப்பஞ்சாயத்து செய்வது என திருச்சியில் செல்வாக்கு செலுத்தி வந்துள்ளார். மேலும் சட்டவிரோதமாக தொழில் செய்யும் கும்பலை பிடித்து பணம் பறிக்கும் வேலையையும் ஜெகன் செய்து வந்துள்ளார்.

தன்னுடைய கடைசி பிறந்த நாளை பட்டாகத்தியுடன் கேக் வெட்டி கொண்டாடிய ஜெகன், கறி விருந்துடன் மிகப்பெரிய அலப்பறை செய்து அதற்காகவும் சிறை சென்றார். எண்கவுண்டர் செய்வதற்கு சிலர் நாட்களுக்கு முன்பு முடிஞ்சா என்னை பிடிச்சுப்பாரு, சிபிஐ கூட தொட முடியாது என்கிற தொணியில் தீம் மியூக்குடன் வீடியோக்களை வெளியிட்டு ஜெகன் மிரட்டி இருக்கிறார். கடைசியாக மேல்சிந்தாமணியில் தங்கம் கடத்தலில் டீல் பேசிய போது போலீசிடம் சிக்கியுள்ளான். மேல் சிந்தாமணி சகோதரர்கள் தான் கொம்பன் ஜெகனை போலீசிடம் மாட்டிவிட்டதாக ஜெகனின் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.

17 வயதில் கத்தியை தூக்கிய ஜெகன், தன் மனைவியை உதறிவிட்டு, இளம் ரத்தம் யாருக்கும் அஞ்சாது என்ற உண்மையின்படி விரும்பியதை எல்லாம் செய்திருக்கிறார். கெட்ட சவகாசத்தால் தவறான வழியில் போய், தன்மூப்பில் சுற்றி இருக்கிறார். அவரது கெட்ட சவகாசங்கள் 30 வயதிலேயே இறந்து போக காரணம் ஆகி உள்ளன. இளம் வயதில் கெட்ட சவகாசம் ஏற்பட்டு கண்டபடி சுற்றுவோருக்கு ஜெகன் ஒரு பாடமாக அமைந்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+