இன்ஸ்டாகிராமில் காதல் வலை... கல்லூரி மாணவிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டிய திருச்சி இளைஞர் கைது
இன்ஸ்டாகிராமில் காதல் வலை வீசி ஏராளமான பெண்களை ஆபாசமாக படம் பிடித்து மிரட்டிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி: இன்ஸ்டாகிராம் மூலம் இளம் பெண்களுக்கு காதல் வலை வீசி அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். 40 பெண்களுடனான ஆபாச வீடியோக்கள் உட்பட லாப்டாப், நகைகள் பறிமுதல் செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞரின் பெயர் விஷ்வா என்பதாகும். இவர் திருச்சி தில்லை நகரில் வசித்து வருகிறார்.
சென்னை பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்த 19வயது கல்லூரி மாணவி திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பெற்றோருடன் வந்து விஷ்வா மீது புகார் மனு அளித்தார்.
Recommended Video
அந்த மனுவில் விஷ்வா,29 என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான தன்னை காதலிப்பதாக கூறி தன்னுடன் பழகியதாக கூறியுள்ளார்.பின்னர் தன்னை ஆபாசமாக புகைப்படம் எடுத்து அதை இணையதளத்தில் வெளியிட்டுவதாத கூறி மிரட்டி தன்னிடமிருந்து 25 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மேலும் லேப்டாப், ஐபோன் ஆகியவற்றை பறித்துக் கொண்டார் என புகார் அளித்தார்.

கைது செய்த காவல்துறை
இளம்பெண் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளர் சியாமளாதேவி வழக்குப்பதிவு செய்தார். விஷ்வாவை திட்டம் போட்டு கைது செய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து புகார் அளித்த சென்னை மாணவியை வைத்து விஷ்வாவிற்கு போன் செய்தனர். குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு சென்னை மாணவி கூறவே அதைக்கேட்டு ஆசையோடு வந்த விஷ்வாவை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

லேப்டாப் ஐபோன் பறிமுதல்
தொடர்ந்து அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் சோதனை மேற்கொண்ட போது. வீட்டில் வைத்திருந்து லேப்டாப், ஐபோன் மற்றும் நகைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

வேலையில்லா இளைஞர்
எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இஞ்சினியரிங் படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்த விஷ்வா இன்ஸ்டாகிராமில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களுடன் பழகி அவர்களை காதல் வலையில் வீழ்த்தி உல்லாசமாக இருந்ததாக காவல்துறையினரிடம் கூறினார்.

மிரட்டி பணம் பறித்து
அதை வீடியோவாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும், மாணவிகளின் பெற்றோரிடம் காண்பித்து விடுவேன் என்றும் அவ்வப்போது மிரட்டி அவர்களிடம் பணம் மற்றும் நகைகளை பறித்துள்ளார்.
இதுவரை சென்னையை சேர்ந்த மாணவி உள்பட ஏராளமான பெண்களிடம் பல லட்சக்கணக்கான ரூபாய் பறித்துள்ளதாக கூறப்படுகிறது.

4 ஆண்டுகளாக பணம் பறித்த விஷ்வா
விஷ்வாவின் லேப்டாப்பில் 30க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்கள் இருந்ததை கண்ட காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக அவர் இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களை மயக்கி காதல் வலையில் வீழ்த்தி நகை, பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது. தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏமாற்றும் இளைஞர்கள் பற்றி பல செய்திகள் வெளியானாலும் அதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் பெண்கள் ஏமாந்து கொண்டிருக்கின்றனர் என்று பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications