வந்தே பாரத் திட்டத்தின் கீழ் திருச்சி - சிங்கப்பூர் இடையே மேலும் 4 விமானங்கள் இயக்கம்
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் திருச்சி சிங்கப்பூர் இடையே மேலும் 3 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. ஜூலை 9ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.
திருச்சி: வந்தே பாரத் திட்டத்தின் மூலம் திருச்சி-சிங்கப்பூா் இடையே மேலும் 4 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. ஜூலை 9,12,14 ஆம் தேதிகளில் திருச்சியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
கொரோனோ வைரஸ் பாதிப்பினால் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக தாயகம் வரமுடியாமல் சிக்கியிருந்த இந்தியர்களை வந்தே பாரத் திட்டம் மூலம் மத்திய அரசு மீட்டு வருகிறது. கடந்த மாதம் 6ஆம் தேதி முதல் சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது.
மூன்று கட்டங்களாக சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு அதன் மூலம் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தாயகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். தற்போது 4 ஆம் கட்டமாக ஜூலை 3ஆம் தேதி முதல் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்திருந்தது. மேலும் வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சிறப்பு விமானங்களுக்கும், சரக்கு சேவை விமானங்களுக்கும் அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து 4 ஆவது கட்டமாக, ஜூலை 3 ஆம் தேதி ஒரு விமானம் இயக்கப்பட்ட நிலையில் 9, 12, 14 ஆகிய தேதிகளிலும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. 9 மற்றும் 12 ஆம் தேதிகளில் முற்பகல் 11 மணிக்கும், 12 ஆம் தேதி காலை 9 மணிக்கும், திருச்சியிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டுச் செல்கிறது. அதேபோல 9ஆம் தேதி மாலை 5.40க்கும், 12, 14 ஆம் தேதிகளில் இரவு 8.50க்கும் சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானம் திருச்சி வந்து சோ்கிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications