மணப்பாறை அருகே ஒரு பூத்தில் வாக்குப் பதிவு 3 மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தம்! மக்களிடம் பேச்சுவார்த்தை
திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டசபைத் தொகுதிக்குள்பட்ட வெள்ளையக்கோன்பட்டி அருகே உள்ள ஒரு வாக்குச்சாவடியில் 3 மணி நேரத்திற்கு மேலாக வாக்குப் பதிவு நடைபெறாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலில் வாக்குப் பதிவு இன்று தொடங்கியது. இது மாலை 6 மணி வரை நடைபெறும். இந்த நிலையில் தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

காலை முதலே தமிழகத்தில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் தங்கள் வாக்குகளை அளித்தனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வெள்ளையக்கோன்பட்டியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெறாமல் இருக்கிறது.
வாக்குச் சாவடிகளில் 200 மீட்டருக்குள் வாக்கு சேகரிக்கக் கூடாது என்பது தேர்தல் விதிமுறை! ஆனால் இந்த பூத்தில் சிலர் 200 மீட்டருக்குள் வாக்கு சேகரித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அங்கு வந்த எஸ்பி தலைமையிலான அதிரடிபடையினர் அவர்கள் மீது தடியடி நடத்திய போது, அங்கு வரிசையில் நின்றிருந்த பொதுமக்கள் மீது தடியடி நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக வாக்கு பதிவு செய்யவில்லை. இது தொடர்பாக அதிகாரிகள் அவர்களிடம் பேசியும் அவர்கள் யாரும் வாக்களிக்கவில்லை. அங்கு மொத்தம் 618 வாக்குகள் இருக்கும் நிலையில் வெறும் 316 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. மக்களை சமாதானப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications