எந்த கொம்பனாலும் நம் ஆட்சியை குறை சொல்ல முடியாது! ஸ்டாலின் கூறிய ஒற்றை வார்த்தை! குவிந்த கைத்தட்டு
திருச்சி: ‛‛சில வீடுகளில் நமக்கு வரவேற்பே இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் நாம் விட்டுவிடக்கூடாது. மீண்டும் மீண்டும் அடுத்த மாதம் புன்னகையுடன் அணுக வேண்டும். ஏனென்றால் எந்த கொம்பனும் குறை செல்ல முடியாத ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறோம்'' என முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் பேசியபோது கைத்தட்டு குவிந்தது.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதி மற்றும் புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளில் வெற்றி பெறும் முனைப்பில் திமுக தேர்தல் பணியை தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தான் இன்று திருச்சியில் 15 மாவட்டங்களை சேர்ந்த திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
நாடாளுமன்ற தேர்தல் பணியை அனைவரும் ஆர்வமாக மேற்கொள்ள வேண்டும். நமது சாதனைகளை மக்களுக்கு தொடர்ந்து எடுத்து கூற வேண்டும். அரசு திட்டங்கள் பற்றி மிகத்தெளிவாக தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். யாருக்கு என்ன தேவையோ அதனை பெற்று கொடுங்கள். ஒருவருக்கு முதியோர் உதவித்தொகை தேவைப்படலாம். இன்னொருவருக்கு பட்டா மாறுதலில் உதவி தேவைப்படலாம். இதனை செய்துதர ஒன்றிய, நகர, பேரூர் கிளை செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர், எம்எல்ஏ, அமைச்சர்களை அணுகுங்கள்.
வாக்குச்சாவடி முகவர்கள், பொறுப்பாளர்கள் கொண்டு வரும் கோரிக்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என நான் பல முறை சொல்லி இருக்கிறேன். இனி திரும்ப திரும்ப நினைவுப்படுத்த உள்ளேன். வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் தகுதி வாய்ந்த கோரிக்கைகள் கட்டாயம் நிறைவேற்றி தரப்படும் என உறுதியளிக்கிறேன்.
மேலும் தினமும் ஒருமணிநேரம் வாக்குச்சாவடி பணிகளுக்கு என்று நேரம் ஒதுக்குங்கள். ஒவ்வொரு நாளும் 10 வீடுகளுக்கு சென்று பேசுங்கள். ஒரு மாதத்தில் வாக்குச்சாவடியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று வந்து விடலாம். சில வீடுகளில் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். சில வீடுகளில் பட்டும்படாமலும் வரவேற்பார்கள். சில வீடுகளில் வரவேற்பே இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் நாம் விட்டுவிடக்கூடாது.
மீண்டும் மீண்டும் அடுத்த மாதம் புன்னகையுடன் அணுக வேண்டும். என்னை பொறுத்தவரை நம்மை நிராகரிப்பவர்கள் இருக்க மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால் அனைவருக்கும் பொதுவான ஆட்சியை நாம் நடத்தி வருகிறோம். எந்த கொம்பனும் குறை செல்ல முடியாத ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறோம்.(இந்த வேளையில் கட்சியினர் உற்சாகமாக கைத்தட்டி விசிலடித்தனர்) எங்களுக்குள் குறைகள் இருக்கலாம். பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் ஆட்சியில் எந்த குறையையும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
ஏனென்றால் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் பயனடையும் வகையிலான திட்டத்தை நாம் செயல்படுத்தி வருகிறோம். இதனால் மக்கள் நம் மீதும் ஆட்சி மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். ஆட்சிக்கு வந்தவுடன் ஆயிரக்கணக்கான மனுக்கள் எனக்கு வரும். இப்போது குறைந்துள்ளது. இதுவே எனக்கு பெருமை என நினைக்கிறேன்'' என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications