திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சாப்பாடு, தூக்கம் மறந்து.. தீபாவளி துறந்து.. சுஜித் மட்டுமே மனசு முழுசும்.. அத்தனையும் வீணாகிய சோகம்

சுஜித்தை மீட்க இறங்கிய வீரர்களுக்கு சபாஷ் சொல்ல வேண்டும்

Google Oneindia Tamil News

மணப்பாறை: விடிந்தால் தீபாவளி என்ற விஷயத்தையே வீரர்கள் மறந்துவிட்டனர்.. எல்லாருடைய துடிப்பும் சுஜித்தை மீட்க வேண்டும் என்பதுதான்!

சுஜித் குழிக்குள் விழுந்தவுடனேயே காவல்துறை, தீயணைப்பு துறையினர் குவிந்தனர். வழக்கமான மீட்பு நடவடிக்கை என்பது போலதான் தெரிந்தது. அன்றைய ராத்திரியே மணிகண்டன் டீமை வரவழைத்ததும்தான் விஷயம் சீரியஸ் ஆக தென்பட்டது.

மீட்பு பணி மொத்தம் 5 நாட்கள் என்று பொதுவாக பார்த்தாலும், ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாகிவிடக்கூடாது என்பதே மீட்பு படையினரின் ஒரே குறிக்கோளாக இருந்தது.. மீட்பு படையினர் வீரர்கள் என கிட்டத்தட்ட 150 பேர் துடிதுடித்தபடியே இருந்தனர்.

மயங்கி கிடக்கும் சுஜித் அம்மா.. சோகத்தில் குடும்பம்.. இந்த நர்ஸ் ஏன் இப்படி சிரிக்கணும்?மயங்கி கிடக்கும் சுஜித் அம்மா.. சோகத்தில் குடும்பம்.. இந்த நர்ஸ் ஏன் இப்படி சிரிக்கணும்?

களத்தில் வீரர்கள்

களத்தில் வீரர்கள்

இவர்கள் 150 பேரை தவிர, தேசிய பேரிடர் மீட்புப்படையினர் 38 பேர், மாநில பேரிடர் மீட்புப்படை வீரர்கள் 21 பேர் என்எல்சியைச் சேர்ந்த 10 பேர், எல்அண்ட்டியைச் சேர்ந்த 10 ‌பேர், ஓஎன்ஜிசியைச் சேர்ந்த 4 பேர்என அத்தனை பேருமே களத்தில் இறங்கி இருந்தனர்.

பண்டிகை

பண்டிகை

இவர்கள் எல்லாம் எப்போது சாப்பிட்டார்கள், எப்போது தூங்கினார்கள் என்றுகூட நமக்கு தெரியாது. எல்லா டிவி சேனல்களிலும் சுஜித்தின் மீட்பு நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் அப்பட்டமாக காட்டப்பட்டே வந்தது. இதே வீரர்கள்தான் சுழன்று சுழன்று வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

பொன்.ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன்

சம்பவ இடத்துக்கு நேற்று வந்த பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்கூட, "தங்கள் சொந்த வீட்டில் நடந்திருக்கும் ஒரு துக்கத்தை போல நினைத்து வீரர்கள் வேலைசெய்கிறார்கள்" என்று சொன்னார். அந்த அளவுக்கு இந்த மீட்புகுழுவினரையும் சுஜித் கட்டிப்போட்டு விட்டான்.

தீயணைப்பு வீரர்

தீயணைப்பு வீரர்

அமைச்சர்கள், நிர்வாகிகள், அதிகாரிகள் என்னென்ன ஆலோசனைகளை வழங்குகிறார்களே அதை அப்படியே உடனுக்குடன் செயல்படுத்தினர். துளையிடுவதாக இருந்தாலும் சரி, ரிக் மிஷினை சரி செய்வதாக இருந்தாலும் சரி, குழிக்குள் இறங்கி மண்ணின் தன்மையை சரிபார்ப்பதாக இருந்தாலும் சரி, எல்லாவற்றிற்குமே இவர்கள் தயாராக இருந்தனர். அதன்படியே தீயணைப்பு வீரர்கள் 2 பேர் குழிக்குள் இறங்கியும் உதவினர்.

ஏக்கம்

ஏக்கம்

மேலும் ஏராளமான ஸ்டண்ட் மாஸ்டர்களும் சுஜித்தை காப்பாற்ற சென்னையில் இருந்து தாங்களாகவே கிளம்பி சென்றனர். இது எல்லாவற்றிற்கும் மேலாக சிறுவன் மாதேஷின் பங்கு ஏராளம்.. எப்படியாவது சுஜித் வந்துவிட மாட்டானா என்ற ஏக்கமும், கலக்கமும் மாதேஷின் நடவடிக்கைகளில் வெளிப்பட்டது.. சுஜித்தை மீட்க முடியாதது பெரும் சோகம்தான்.. ஈடு செய்ய முடியாத இழப்பு என்றாலும்.. அவனது உசுரை காப்பாற்ற இத்தனை பேரின் முயற்சி, உழைப்பு, அர்ப்பணிப்பையும் நாம் பாராட்டாமல் இருக்க முடியாது!

English summary
sujith rescue operation failure: We must congratulate the rescue team
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X