"சாயங்காலம் ஒருத்தர் வீடு.. காலையில் இன்னொருத்தர்.. திணறிட்டேன்".. திருச்சியை குளிரவைத்த ஜெயக்குமார்
: திருச்சி அதிமுகவினரை புகழ்ந்து தள்ளினார் அமைச்சர் ஜெயக்குமார்
திருச்சி: திருச்சியில் அதிமுகவினர் காட்டிய அன்பு என்னை திக்குமுக்காடச் செய்துவிட்டது முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நெகிழ்ந்து போய் கூறியுள்ளார்.
முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மீது திமுக பிரமுகரை தாக்கியது தொடர்பாக 2 வழக்குகள் பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
வழக்குகளில், மார்ச் 11ம் தேதி ஜாமீன் பெற்ற நிலையில், திருச்சியில் 2 வாரம் தங்கியிருந்து திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் கண்டோண்ட்மெண்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஜாமீன் கையெழுத்து
அதன் அடிப்படையில் கடந்த 2 வார காலமாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த ஜெயக்குமார் திங்கள், புதன், வௌ்ளி ஆகிய நாட்களில் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு விதிக்கப்பட்ட இரண்டு வார காலம் இன்றோடு முடிவடைந்தது. நிபந்தனை ஜாமீன் உத்தரவின்படி, அவர் இதன் பிறகு திங்கள் தோறும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.

பூங்கொத்து
இதனையொட்டி அவர் திருச்சியில் இருந்து நேற்று சென்னைக்கு புறப்பட்டு சென்றார். அவரை திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் வழியனுப்பி வைத்தனர். மேலும் முன்னாள் அமைச்சர் வேலுமணி, திருச்சி வந்து அவரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். பின்னர் அவர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அதை தொடர்ந்து கோவைக்கு கார் மூலம் புறப்பட்டு சென்றார்.

மறக்க முடியாத அன்பு
சென்னைக்கு புறப்படும் முன்பு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் சொன்னதாவது: திருச்சியில் உள்ள அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் காட்டிய அன்பு என்னை திக்கு முக்காடச் செய்தது. என்னை அதிமுக சகோதரர்கள் அன்புடன் மறக்கமுடியாத வகையில் கவனித்தார்கள். காலை ஒருவர் வீடு, மதியம் ஒருவர் வீடு, மாலை ஒருவர் வீடு என இதுவரை 300-க்கும் அதிகமானோர் சேர்ந்து என்னை அன்புடன் கவனித்தார்கள்.

பொருளாதார நிபுணர் குழு
2,14,00,000 பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்தார்கள். 5 வருடத்திற்கு கொடுக்க வேண்டும் என்றால் அவ்வளவு நிதி நம்மிடம் உள்ளதா? நிதிநிலையை பெருக்குவதற்கு என்ன மாதிரியான வழிமுறைகள் உள்ளது? என்றெல்லாம் இவர்கள் யோசிக்கவே இல்லை. அதற்காக வந்தவுடன் அமைக்கப்பட்ட பொருளாதார நிபுணர் குழு இதுவரை என்ன செய்துள்ளது?.

முதல்வர் பயணம்
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் சென்றிருப்பது அவருடைய சொந்த பயணத்திற்காகவா அல்லது முதலீடுகளை ஈர்ப்பதற்காகவா? என்று தெரியவில்லை.. அதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 2 கோடியே 14 லட்சம் பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்தார்கள். 5 வருடத்திற்கு கொடுக்க வேண்டும் என்றால் அவ்வளவு நிதி பட்ஜெட்டில் கொடுப்பதற்கு வாய்ப்பில்லை.

விவசாய கடன் ரத்து
கல்விக்கடன் ரத்து, விவசாய கடன் ரத்து என்று தி.மு.க.வினர் மக்களை திசைதிருப்பி ஏமாற்றி வாக்குகளை பெற்றார்கள்.. தாலிக்கு தங்கம் என்கிற மகத்தான திட்டத்திற்கு மூடு விழா செய்து விட்டனர். நிதிநிலையை பெருக்குவதற்கு என்ன மாதிரியான வழிமுறைகள் உள்ளது என்பதனை யோசிக்கவே இல்லை. அதற்காக அமைக்கப்பட்ட பொருளாதார நிபுணர் குழு இதுவரை என்ன செய்துள்ளது. திறமையற்ற நிர்வாகம் தமிழகத்தை ஆண்டு வருகிறது.

ஜாமீன் - கையெழுத்து
அதிமுகவின் எழுச்சியைப் பார்த்து திமுகவினர் பொறுத்துக்கொள்ள முடியாமல் பொய் வழக்கு போடுகிறார்கள். இது மன்னராட்சி அல்ல, மக்களாட்சி நீதிமன்றத்தை நம்புகிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தவறு செய்யும் போது நீதிமன்றம் தட்டி கேட்கும் என்று நம்புவதால் எங்களுக்கு பயமில்லை" என்றார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்... கோர்ட் உத்தரவின்படி ஜெயக்குமாா் இனிமேல், திங்கள்கிழமைதோறும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications