கணவரை பற்றி ஆபாச படம்.. பேஸ்புக்கில் போட்ட மனைவி.. அதிர்ந்து போன போலீஸ்.. திருச்சியில் ஷாக்!
கணவனின் ஆபாச படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட மனைவி கைதாகி உள்ளார்
திருச்சி: ஒரு பெண் ஆபாச படங்களை அப்லோடு செய்துள்ளார் என்றால் நம்ப முடிகிறது... அதுவும் தாலி கட்டிய கணவரின் போட்டோவுடன் இன்னொரு பெண்ணின் ஆபாச போட்டோவை இணைத்து பதிவிட்டுள்ளார்.. அந்த பெண் ஒரு காலேஜ் புரபசர் என்பது கூடுதல் ஷாக்!
திருச்சியை சேர்ந்தவர் மோகன் ஜெய்கணேஷ்... அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி தாட்சாயிணி.. இவரும் ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.. இவர்களுக்கு கல்யாணம் ஆகி 3 வருஷமாகிறது.
ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து, அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார்.. இருந்தாலும் 2 பேரும் போன் போட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். மோகனுக்கு ஃபேஸ்புக்கில் தன்னை பற்றின பதிவுகளை எழுதுவது வழக்கம்.

சம்பவங்கள்
தன் வாழக்கையில் நடந்த அத்தனை சம்பவங்களையும் உடனே ஃபேஸ்புக்கில் பதிவிடுவார்.. அந்த வகையில், குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்தும் பதிவு செய்து வந்திருக்கிறார்... அப்படி ஒரு பதிவில், தன் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையை பதிவிட்டார்.. அத்துடன், தங்கள் திருமண நாள் அன்று எடுத்த போட்டோவையும் மோகன் பதிவிட்டார்.

தாட்சாயிணி
இதை பார்த்ததும் தாட்சாயிணிக்கு கோபம் வந்துவிட்டது.. உடனே வழக்கம்போல போனை போட்டு, சண்டையும் பிடித்தார்.. அந்த போட்டோக்களை எல்லாம் டெலிட் செய்யுமாறு சொன்னார்.. அதற்கு மோகனோ, "இந்த நிமிஷம்வரை நீதான் என் மனைவி.. அதனாலதான் போட்டோ போட்டேன்" என்றார். இதை கேட்டும் இன்னும் ஆவேசமானார் தாட்சாயிணி.

ஃபேஸ்புக்
கணவரை பழிவாங்கவும் முடிவு செய்தார்.. இதற்காக தன் காலேஜில் வேலை பார்க்கும் 28 வயதான கிருபாகரன் என்பவரிடம் உதவி கேட்டார்... பிறகு தாட்சாயிணியும் கிருபாகரனும் சேர்ந்து மோகனின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆபாச படங்களை பதிவிட முடிவு செய்தனர். கணவரின் பாஸ்வேர்டு தாட்சாயினிக்கு தெரியும் என்பதால், அவரது ஃபேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்தார். சில பெண்களின் ஆபாச படங்களை பதிவிட்டார்.

மார்பிங்
மேலும் சில பெண்களின் படங்களை எடுத்து மிக மிக அருவருப்பான வகையில் மார்பிங் செய்து அதையும் பதிவிட்டார்.. இதைப்பார்த்து ஷாக் ஆன மோகன், உடனடியாக பாலக்கரை போலீசில் புகார் தந்தார்.. விசாரணையில் தாட்சாயினியும், கிருபாகரனும் செய்த சதித்திட்டம் அம்பலமானது.

தொழில்நுட்பம்
இதையடுத்து, மோசடி, தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துதல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்... கிருபாகரனையும் கைது செய்து விட்டார்.. ஆனால், தாட்சாயினியை காணோம்.. அவரை தான் தேடி வருகிறார்கள்.. வழக்கமாக பெண்களின் ஆபாச படங்களைதான் இப்படி பதிவிட்டு மிரட்டுவார்கள்.. ஆனால், ஒரு பெண்ணே ஆபாச படங்களை அப்லோடு செய்தது கடுமையான அதிர்ச்சியை தந்து வருகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications