அமெரிக்காவில் படித்தவர் பிடிஆர்.. பொருளாதாரமும் தெரியல - பேசுறதும் புரியல! அதிமுக முன்னாள் அமைச்சர்
தூத்துக்குடி: தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளிநாட்டில் படித்து, வெளிநாட்டு வங்கியில் வேலை செய்தவர் என்றும், அவர் தமிழ்நாடு மக்களின் வாழ்வாதாரத்தை, பொருளாதாரத்தை கையாள்வது குறித்து தெரியாததால், எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டி இருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாத்தூர் மெயின் ரோட்டில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9 லட்சம் மதிப்பிலான புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையில் நிழற்குடையை மக்கள் பயன்பாட்டுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "கோவில்பட்டியில் 82 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் பெயரில் அகற்றப்பட்டது. 100க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. தடுப்புச் சுவர் அமைப்பதற்காக 14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
தேர்தல் நடைமுறை காரணத்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனால் தற்போது திமுக ஆட்சி அதை நடைமுறைப்படுத்தவில்லை. உச்சநீதிமன்ற நடைமுறைப்படி தான் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதை இந்த அரசு செய்யவில்லை. தற்போது ஆக்கிரமிப்புகள் நடந்தால் அதற்க்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் சிறைக்கு செல்வார்கள். இது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகும். இதை புரிந்து கொண்டு அதிகாரிகள் செயல்பட வேண்டும்.

அமெரிக்காவின் பொருளாதாரம் அறிந்தவர் பிடிஆர்
நிதியமைச்சர் மெத்த படித்தவர். அவருக்கு அமெரிக்காவின்
பொருளாதாரம் பற்றி தெரியுமே தவிர, தமிழகத்தின் பொருளாதாரம் தெரியாது. ஏனென்றால் அவர் நிதி அமைச்சரான பின்பு ஆக்கப்பூர்வமாக இதுவரை நிதிச்சுமையை கையாளுவதில் என்ன மாறுதல் கொண்டு வந்திருக்கிறார்? என்ன செய்திருக்கிறார்? சட்டமன்றத்தில் அவர் பேசினால் அவருக்கு மட்டும் தான் புரியும். மற்றவர்களுக்கு புரியாது.

புரியாததுபோல் பேசுவார்
மற்றவர்களுக்கு புரியாததைபோல் பேசுவார். மற்றவர்களெல்லாம் படிக்காததைபோல் பேசுவார். தமிழ்நாடு மக்களின் எதார்த்த நிலை அவருக்கு தெரியாது. அவர் படித்ததெல்லாம் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில். பிடிஆரின் வாரிசாக இருக்கலாம். அவருடைய பேரனாக இருக்கலாம். அந்த வகையில் திராவிட பாரம்பரியத்துக்கு சொந்தக்காரராக இருக்கலாம். ஆனால் அவர் வளர்ந்த விதம் படித்தது எல்லாம் மேலை நாடுகளில் மேலைநாட்டு நகரத்தில் வளர்ந்தவர்.

அரசை வீட்டுக்கு அனுப்புவார்
அது போக அமெரிக்காவில் உள்ள வங்கியில் பணியாற்றியவர். இதனால தான் அங்கு உள்ள பொருளாதாரத்தை வைத்து செயல்படுகின்றாரே, தவிர இங்கு உள்ள ஏழை மக்களுக்கு, விவசாயிகளுக்கு, தமிழக மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அவருடைய பொருளாதாரத்துவம் இல்லை. எங்களின் இந்த குற்றச்சாட்டு இப்படியே தொடர்ந்தால் இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதில் முதல் ஆளாக பிடிஆர் இருப்பார்." என்றார்.

நிர்வாகிகள் பங்கேற்பு
இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் விஜய பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, அவைத்தலைவர் அப்பாசாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், நகர துணைச் செயலாளர் மாதவராஜ், நகரப் பொருளாளர் ஆரோக்கியராஜ், நகர மன்ற உறுப்பினர்கள், கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன், செண்பக மூர்த்தி, மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் அம்பிகா வேலுமணி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராமர், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், அம்மா நகர பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், மகளிர் அணி ஜெயந்தி, பத்மாவதி, மற்றும் அதிமுக நிர்வாகிகள் பழனி குமார், முருகன், அல்லித்துரை, கனிராஜ், கோபி, ஜெயசிங், பழனி முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications