தூத்துக்குடி கயத்தாறு ஒன்றியத்தை கைப்பற்றிய அமமுக.. அதிமுக பரிதாப தோல்வி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: ஊரக உள்ளாட்சி தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளையும் அதிர வைக்கும் வகையில் தூத்துக்குடி கயத்தாறு ஒன்றியத்தை தினகரனின் அமமுக கைப்பற்றியுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று 2-வது நாளாக நடைபெற்றது. மாவட்ட கவுன்சில்களில் திமுக 14; அதிமுக 13 இடங்களை கைப்பற்றுகிறது.

Dinakarans AMMK captures Kayatharu Union

ஒன்றிய கவுன்சில்களிலும் இரு கட்சிகளிலும் சரிசமமாக உள்ளன. பொதுவாக மேற்கு மண்டலங்கள் அதிமுகவுக்கு கை கொடுத்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய மண்டலங்கள் திமுகவுக்கு வெற்றியை தந்துள்ளன.

இந்த இரு பிரதான கட்சிகளையும் அதிர வைக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியத்தை அமமுக கைப்பற்றியுள்ளது.

கயத்தாறு ஒன்றியத்தில் மொத்தம் 16 வார்டுகளில், அமமுக 10 கவுன்சிலர்களையும் திமுக 4 கவுன்சிலர்களையும் பெற்றுள்ளது. இங்கு அதிமுகவுக்கு 1 கவுன்சிலர் மட்டும்தான் கிடைத்துள்ளது. கயத்தாறு ஒன்றியத்தில் சுயேட்சை ஒருவர் வென்றுள்ளார்.

இதனால் இந்த ஒன்றியம் அமமுக வசமானது. வரும் 11--ந் தேதி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+