"திமுகவால் தான் காங்கிரஸ்-க்கு மரியாதை.. ஸ்டாலின் தலைமையில் ஒன்றிணைவோம்" ஈவிகேஎஸ் இளங்கோவன் பரபர!
தூத்துக்குடி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் கட்சி இடையிலான கூட்டணி நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. அண்மையில் காங்கிரஸ் கட்சி சார்பாக தொடங்கப்பட்ட பாரத் ஜோடோ யாத்திரையை கூட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்மூலம் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை மு.க.ஸ்டாலின் உறுதி செய்ததாகவே பார்க்கப்படுகிறது.
ராகுல் காந்தியின் தேச ஒற்றுமைப் பயணத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினி யோசனையே என்ற தகவலும் வெளியாகியது. அதேபோ ராகுல் காந்தி நடைபயணத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும் உற்சாகமாக பங்கேற்றனர். முக்கியமாக தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கோஷ்டி பூசலை மறந்து நடைபயணத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதற்கு பின் ஈவிகேஎஸ் இளங்கோவன், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் கட்சி செயல்பாடுகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு
இதனைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தரப்பில் ஆலோசனை கூட்டங்கள், அடுத்தக்கட்ட செயல்பாடுகள் என பரபரப்பாக தேர்தலை பணிகளை தொடங்கியுள்ளனர். பாஜகவுக்கு எதிரான விவகாரங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சண்முகத்தின் பொதுவாழ்வில் பொன்விழா நிகழ்ச்சியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்துகொண்டார்.

பாஜக ஆட்சி மீது விமர்சனம்
அப்போது அவர் பேசுகையில், மத்தியில் 8 ஆண்டுகளாக ஒரு ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜாதி, மதம், மொழி ஆகியவற்றின் பெயரால் அவர்கள் மக்களை பிரிக்க முயற்சிக்கிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் இந்தியாவின் பெருமை. ஆனால் நாட்டில் மதத்தின் மூலம், ஜாதியின் மூலம் குழப்பம் ஏற்படுத்தி கொண்டிருக்கின்றனர். நாம் ஒற்றுமையுடன் இருந்து தடுத்து நிறுத்த வேண்டும்.

திராவிட மாடல்
இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாம் அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம். பாஜகவை மு.க.ஸ்டாலின் எதிர்க்கும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்க்கவில்லை. இதற்காக நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். திராவிடல் மாடல் ஆட்சி இந்தியா முழுவதும் வரவேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். அதற்கு காங்கிரஸ் கட்சியினர் உறுதுணையாக இருக்க வேண்டும்.

காங்கிரஸ்-க்கு மரியாதை
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு திமுகவால் தான் மரியாதை வந்துள்ளது. மு.க. ஸ்டாலின் ஆதரவு இல்லாமல் நாம் தனித்து நின்று இவ்வளவு எம்எல்ஏ-க்கள், எம்பி-க்கள் வெற்றி பெற்றிருக்க முடியாது. இதற்காக திமுகவையும், முதலமைச்சரையும் பாராட்டியே ஆக வேண்டும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications