கோவில்பட்டியில் பயங்கரம்.. சென்னை சில்க்ஸ் கடையில் தீவிபத்து.. கட்டிடமே பற்றி எரிந்தது!
கோவில்பட்டி சென்னை சில்க்ஸ் ஷோரூமில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது
Recommended Video
கோவில்பட்டி: கோவில்பட்டி சென்னை சில்க்ஸ் ஷோரூமில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஜவுளிகள் துணிகள், ரெடிமேட் துணிகள் என மொத்தமாக தீயில் எரிந்து கருகின. ஷோரூம் கட்டிடமே தீப்பிடித்து எரிந்ததால், அந்த பகுதியே கரும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
கோவில்பட்டி பஸ் ஸ்டேண்ட் அருகே சென்னை சில்க்ஸ் ஜவுளி கடை உள்ளது. இந்த ஷோரூமில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது. கட்டிடத்தின் 3-வது மாடியில் திடீரென புகை வர ஆரம்பித்தது. இதையடுத்து, முதல், 2-ம் தளங்களில் தீ, மளமளவென பரவி மொத்தமாகவே தீப்பிடித்து எரிந்தது.

விடிகாலை நேரம் என்பதால், கடைக்கு வெளியே செக்யூரிட்டிகள்தான் இருந்தனர். அதனால், உடனடியாக கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திறகு போன் செய்யவும், வீரர்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஒரு வண்டி மட்டும் முதலில் வந்ததால், தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அதனால், விளாத்திகுளம், கழுகுமலை உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 வண்டிகள் வரவழைக்கப்பட்டது. அதன்பிறகு வீரர்கள் தீயை கட்டுக்குள் போராடி கொண்டு வந்தனர். ஆனாலும் கட்டிடம் முழுசுமாக எரிய தொடங்கிவிட்டது.

எப்படியும் இந்த ஷோரூமில் இருந்த 2 கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து கருகியதாக சொல்லப்படுகிறது. இதை தவிர கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த டூவீலர்களும் எரிந்து சாம்பலாகி உள்ளன. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஷோரூம் பகுதி முழுக்க சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக கரும்புகையாக காட்சியளித்தது.
கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, தாசில்தார் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். இந்த விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications