முதல் முறையாக திருச்செந்தூரில் சம்பவம் செய்த "சிலுக்கு".. தூத்துக்குடியை ஈர்த்த 3 திருநங்கைகள்.. அட
தூத்துக்குடி: திருச்செந்தூரில் நடந்த நிகழ்வு ஒன்று, இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. என்ன காரணம்?
திருச்செந்தூரில் திருநங்கைகளுக்கு இல்ல பால் ஊற்றும் விழா நடந்தது. இதில் திரளாக கலந்து கொண்ட திருநங்கைகள் ஆடிப்பாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.

திருநங்கைகள்: கடவுளின் படைப்பில் சிறப்பம்சமாக கருதப்படும் திருநங்கைகள் பல்வேறு துறைகளில் தனி முத்திரை பதித்து வருகிறார்கள்.. ஒருகாலத்தில் வீட்டை விட்டும், ஊரை விட்டும் துரத்தப்பட்டு வந்த இந்த சமூகம், கல்வி, வேலைவாய்ப்பு உட்பட அனைத்திலுமே சாதித்து வருவதுடன், இந்த சமூகத்தை தவறான பார்வையில் இருந்தும் நீக்கி தங்கள் மீது கவனத்தை திருப்பி வருகிறார்கள்.
மதநம்பிக்கை உடையவர்கள், திருநங்கைகளாக மாறியபிறகு பல்வேறு விரதங்களையும் மேற்கொள்கிறார்கள்.. அதாவது, ஆணாக பிறந்து வளர்ந்து முழுமையாக பெண்ணாக மாறுவதற்காக, அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் திருநங்கைகள் 40 நாட்கள் விரதத்தை கடைப்பிடிக்கிறார்கள். அதன்பிறகு அவர்களுக்கு இல்ல பால் ஊற்றும் விழா என்ற சடங்கு நடத்தப்படுகிறது.
புதிய சடங்கு: அந்தவகையில், திருச்செந்தூரை சேர்ந்த கற்பகம், ஷிவானி, சிலுக்கு ஆகியோர், புதிதாக திருநங்கைகளாக மாறியிருக்கிறார்கள்.. இவர்களுக்கு இல்ல பால் ஊற்றும் விழா, திருச்செந்தூர் தனியார் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவுக்கு திருநங்கையர் நலச்சங்க தலைவர் சியாமளா தலைமை தாங்கினார்... போத்திராஜ் மாதா என்று அழைக்கப்படும் சந்தோஷி மாதாவுக்கு பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
புதிதாக திருநங்கைகளாக மாறிய 3 பேருக்கும் சடங்குகள் நடத்தப்பட்டன.. அப்போது 3 பேருமே, கல்யாண பெண் போல அலங்கரிக்கப்பட்டிருந்தனர்.. சடங்குகள் முடிந்த நிலையில், விழாவில் பங்கேற்ற மூத்த திருநங்கைகளிடம் 3 பேரும் ஆசி பெற்றார்கள்..
கொண்டாட்டம்: முதல்முறையாக பால் ஊற்றும் இந்த சடங்கானது வெகுவிமரிசையாக நடந்து முடிந்தது.. இதற்காக மண்டபத்துக்கு வெளியே பேனர்கள் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டிருந்தன. மொய் எழுதிய திருநங்கைகள் இந்த நிகழ்வில் ஆடிப்பாடி மகிழ்ந்தார்கள்..
தமிழகம் மட்டுமின்றி மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இவ்விழாவில் பங்கேற்றனர். திருச்செந்தூரில் முதல் முறையாக திருநங்கைகளுக்கு இல்ல பால் ஊற்றும் விழாவானது, சோஷியல் மீடியாவிலும் வைரலாகி கொண்டிருக்கிறது. முன்னதாக, புதிதாக திருநங்கைகளாக மாறிய ஜமாத் முஸ்லிம் முறைப்படி சடங்கு நடைபெற்றது












Click it and Unblock the Notifications