மன்னாதி மன்னர்கள் ஆண்ட மண்! ஆதிச்சநல்லூரில் கிடைத்த "தங்க கிரீடம்".. சிலிர்க்க வைக்கும் பின்னணி
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருவைக்குண்டம் அருகே ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பகுதியில் தற்போது தங்கத்தால் ஆன கிரீடம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் தங்கத்தால் ஆன ஆபரணங்கள் கண்டெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் அகழ்வாய்வு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக இப்பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில் இதுவரை 70க்கும் அதிகமான முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தொன்மையான நாகரிகம்
உலகின் மிக தொன்மையான நாகரிகமாக சீனாவின் மஞ்சள் நதி நாகரிகம், கிரேக்கம், எகிப்து மற்றும் சிந்து சமவெளி நாகரிகள் மட்டுமே இருந்ததாக நம்பப்பட்டு வந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டின் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கிடைக்க பெற்ற பொருட்கள் மேற்குறிப்பிட்ட தொன்மையான நாகரிகங்கள் பட்டியலில் தமிழர் நாகரிகம்தான் முதன்மையானது என உறுதி செய்துள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் திருவைக்குண்டம் பகுதியையொட்டியுள்ள ஆதிச்சநல்லூர் எனும் பகுதியில் கிடைக்கப்பெற்றுள்ள பொருட்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தொல்லியல் ஆய்வுகள்
இந்த பகுதியில் 1876ல் அகழாய்வு நடத்தப்பட்டது. இதனையடுத்து, 2004ம் ஆண்டு இப்பகுதியில் நடத்தப்பட்ட தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 169 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து இப்பகுதியின் முக்கியத்துவம் குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இதனை பாதுகாக்கப்பட்ட பகுதியாக நீதிமன்றம் அறிவித்தது. இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் சுமார் 3,000 முதல் 2,500 ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அதேபோல சங்க காலம் தொட்டு ஆங்கிலேயர்கள் காலத்திலும் இங்கு மக்கள் வாழ்ந்து வந்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

நாணயங்கள்
இதனையடுத்து ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டதில் கடந்த ஏப்ரல் மாதம் இப்பகுதியிலிருந்து இரண்டு பழங்கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நாணயத்தில் ஒரு தொட்டியில் கடல் ஆமைகளின் உருவம், மரம், யானை, மீனின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. "இந்த நாணயங்கள், ஆதிச்சநல்லூரில் சங்கக் காலத்தில் மக்கள் வாழ்ந்ததையும் கடல் சார் வாணிபம் நடந்ததையும் உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது" என மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல கண்காணிப்பாளர் முனைவர் அருண்ராஜ் கூறியிருந்தார்.

தங்க கிரீடம்
இதனையடுத்து தற்போது தங்க கிரீடம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொருநை நதி ஓரத்தில் அமைந்துள்ள இந்த பகுதியில் மக்கள் செழிப்பாக வாழ்ந்ததற்கான சான்றுகள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன. தங்க கிரீடத்தையடுத்து ஆதிச்சநல்லூர் சி சைட் எனப்படும் அலெக்சாண்டர் ரியாவில் ஏற்கனவே அகழாய்வு செய்யப்பட்ட இடத்தில் 30 செ.மீட்டர் ஆழத்தில் நடந்த அகழாய்வு பணியில் தங்கத்தால் ஆன பட்டயம், வெண்கல வடிகட்டி, 2 கிண்ணம் தாங்கிய பறவை வடிவத்துடன் கூடிய அலங்கார கிண்ணம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications