சேகர் பாபு குறித்து ஹெச் ராஜா அப்படி ஒரு விமர்சனம்.. ஒரே கேள்வி தான்.. ஆடிப்போன அறநிலையத்துறை
தூத்துக்குடி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தேரின் வடத்திற்கு கயிறு வாங்க முடியல.. அதிகாரிகளுக்கு சொகுசு காரா?..கார் கிடையாது.. சைக்கிளில் போங்கன்னு சொல்லுங்க.. எல்லாரும் ஒழுங்கா வேலை பாப்பாங்க.." என்று கூறிய பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா, செய்தியாளர் சந்திப்பில் இந்து அறநிலையத்துறையை கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்டம் கடந்த ஜூன் 21-ம் தேதி நடந்தது மாவட்ட ஆட்சியர், மக்களவை உறுப்பினர், உள்பட பல்வேறு பிரமுகர்கள் தேர் வடத்தை தூக்கி இழுக்க தொடங்கிய அடுத்த நொடியே மூன்று தேர் வடங்களும் அறுந்து போனது. அடுத்த சில நிமிடங்களில் பெண்கள் இழுத்து வந்த நான்காவது வடமும் அறுந்தது. தேர் இருப்பிடத்தை விட்டு ஒரு அடி கூட நகரும் முன்பே இந்த சம்பவம் நடைபெற்றது. 20 ஆண்டுகள் பழமையான நெல்லையப்பர் கோயில் தேர் வடம் அறுந்து விழுந்ததற்கு இந்த முன்னணி அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் பாஜக நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்..

இது தொடர்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்டம் 21-ம் தேதி காலை தொடங்கியது. மாவட்ட ஆட்சியர், மக்களவை உறுப்பினர், ஆளுங்கட்சி பிரமுகர்கள் தேர் வடத்தை தூக்கி இழுக்க தொடங்கிய அடுத்த நொடியே மூன்று தேர் வடங்களும் அறுந்து போனது. அடுத்த சில நிமிடங்களில் பெண்கள் இழுத்து வந்த நான்காவது வடமும் அறுந்தது. தேர் இருப்பிடத்தை விட்டு ஒரு அடி கூட நகரும் முன்பே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நெல்லையப்பர் கோயில் தேர் வடம் 20 ஆண்டுகள் பழமையானதாகும்.
இதனை மாற்ற சொல்லி பக்தர்களும், சிவனடியார்களும், இந்து முன்னணியும் பல வருடங்களாக நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால் கோயில் நிர்வாகம் அதனை பொருட்படுத்தாமல் அலட்சியமாக செயல்பட்டுள்ளதே இந்த சம்பவத்துக்கு காரணம். நடந்த சம்பவத்தை பார்க்கும்போது மாவட்ட நிர்வாகம் இதில் மிகப்பெரிய கவனக்குறைவோடு செயல்பட்டுள்ளது தெரிய வருகிறது. பொதுமக்களிடமோ, பக்தர்களிடமோ, இந்து அமைப்புகளிடமோ எந்த கருத்துக்களையும் அரசு கேட்பதில்லை.அதன் விளைவே நெல்லையப்பர் தேரோட்டத்தில் இத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளது.

கோயில் உண்டியல், வாடகை, குத்தகை, கட்டண தரிசன கட்டணம் என கோயிலிலிருந்து வருமானத்தை, பணத்தை கொண்டு செல்வதில் தான் தமிழக அரசும், இந்து சமய அறநிலைத்துறையும் முனைப்பாக உள்ளதே தவிர, கோயிலுக்குரிய எந்த வசதிகளும் பராமரிப்பு பணிகளும் செய்யாமல் அலட்சியப்படுத்துகிறது. எனவே, இந்த சம்பவத்துக்கு முழு பொறுப்பேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். மேலும், அலட்சியமாக செயல்பட்ட நெல்லை மாவட்ட ஆட்சியர் உட்பட அத்தனை அதிகாரிகள் மீதும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில் திருச்செந்தூரில் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறும் போது,"நெல்லையப்பர் கோவிலில் தேர்வடமானது அறுந்து போயிருக்கிறது.. மூன்று வடம் அறுந்திருக்கிறது. அந்த சமயத்தில் திருச்செந்தூரிலிருந்து எடுத்து சென்ற வடமும் அறுந்து போயிருக்கிறது.. வடத்திற்கு கயிறு வாங்கி போடக்கூட வக்கில்லாமல் இருக்கும் சேகர்பாபு (அலேலுயா பாபு என்று கடுமையாக பேசினார்) போன்ற நபர்கள்.. அந்த அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு சொகுசு காரா... காரை எல்லாம் வாபஸ் வாங்குங்கள்.. வேலை செய்யாதவர்களுக்கு எதுக்குங்க சொகுசு காரு..
இந்துக்களை சுரண்டி சாப்பிடும் துறை என்றால் அது.. இந்து அறநிலையத்துறை தான்.. எந்த இஓ மீது இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்தீங்க.. அந்த நெல்லையப்பர் கோவில் இஓவை முதலில் பணியிட நீக்கம் செய்திருக்க வேண்டும் அல்லவா? கோயிலுக்குள் என்ன அர்ச்சனை பண்ண வேண்டும்.. எப்படி பண்ண வேண்டும்.. சுவாமிக்கு என்ன நெய்வேத்தியம் வைக்க வேண்டும்.. என்ன வைக்கக்கூடாது என்பது உள்ளிட்ட இந்த விஷயத்தில் எல்லாம் அநாவசியமாக தலையிடுறீங்கல்ல.. கயிறு சரியாக உள்ளதா என்று பார்க்ககூடாதா... ஆண்டவன் போற தேருக்கு பாதுகாப்பு இல்லை.. இந்த அதிகாரிகள் போறதுக்கு எதற்கு சொகுசு கார்.. முதலில் அதை வாபஸ் பெற வேண்டும்.. நெல்லையப்பர் கோவில் இஒக்கு இனி கார் கிடையாது.. சைக்கிளில் போங்க என்று சொல்லுங்க.. அப்ப எல்லா இஓக்களும் ஒழுங்காக செயல்படுவாங்க.. இல்லாவிட்டால் நாம் போராட வேண்டியதிருக்கும்" இவ்வாறு ஹெச் ராஜா கூறினார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications