போலீஸா? ஆளும் கட்சி ஐடி விங்கா? எதுக்கெடுத்தாலும் அவங்களே பதில் சொல்றாங்களே! கனிமொழி எம்பி காட்டம்!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: காவல்துறையில் நடக்கக்கூடிய தவறுகளை சுட்டிக்காட்டும் பொழுது, அவர்கள் ஏதோ ஆளுங்கட்சியின் உடைய வாய் பேசி போல் பேசுகிறார்கள். ஆளும் கட்சியினருளுக்கு குரல் கொடுக்கக் கூடியவர்களாக.. அவர்களுக்கு பதிலாக அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பதில் சொல்லக்கூடியவர்களாக மாறி இருப்பது மிகவும் வருந்தக் கூடியது. காவல்துறை அவர்களுடைய பணிகளை செய்ய வேண்டுமே தவிர ஆளும் கட்சியினுடைய ஐடி விங் போல செயல்படக் கூடாது என திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," இந்த ஆட்சியில் நேரடியாக கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய எதுவுமே இந்த அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை.

DMK MP Kanimozhi criticizes Tamil Nadu Police

தமிழக வெற்றி கழகம் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிறகு தமிழக சிறைகளிலிருந்து 50-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறைகளிலிருந்து தப்பித்து ஓடி இருக்கிறார்கள் என்று பத்திரிக்கை செய்திகள் தான் கூறுகிறது.
ஒரே நாளில் 17 கைதிகள் தப்பி செல்லக் கூடிய ஒரு அவலமான சூழ்நிலை இன்று தமிழகத்தில் இருக்கிறது.

காவல்துறையில் நடக்கக் கூடிய தவறுகளை சுட்டிக்காட்டும் பொழுது ஏதோ ஆளுங்கட்சியின் உடைய வாய் பேசியாக.. அவர்களுக்கு குரல் கொடுக்கக் கூடியவர்களாக.. அவர்களுக்கு பதிலாக அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பதில் சொல்லக்கூடியவர்களாக மாறி இருப்பது மிகவும் வருந்தக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது.

தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்த பின்பு எல்லா விலைவாசியும் உயர்ந்து கொண்டே தான் போகிறது. தொடர்ந்து இதைத் தான் எதிர்க் கட்சிகள் சொல்லிக் கொண்டே இருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே எங்கள் தலைவர் அவர்கள் மகளிர் அணி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் வருகிற 31ஆம் தேதி சட்டம் ஒழுங்கு குறித்தும் விலைவாசி ஏற்றம் குறித்தும் ஒரு ஆர்ப்பாட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள்.

ஆவின் பொருட்கள் விலையாவது குறையும் என பார்த்தால், எல்லா பொருட்களின் விளையும் ஏறி உள்ள நிலையில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆவின் பொருள்களின் விலையாவது அவர்கள் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. இந்த ஆட்சியில் நேரடியாக கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய எதுவுமே இந்த அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+