மக்கள் களம்! களமிறங்கிய கனிமொழி! ஆன் தி ஸ்பாட்டிலேயே உடனடி தீர்வு! அனல் பறக்கும் பயணம்!
தூத்துக்குடி: தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் களம் என்ற பெயரில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் கனிமொழி எம்.பி.
இந்தப் பயணத்தில் தொகுதி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால், சலிக்காமல் கிராமம் கிராமமாக பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் ராஜாபுதுக்குடி, சன்னபுதுக்குடி, உள்ளிட்ட பகுதிகளில் கனிமொழி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, தங்கள் கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை பற்றி மக்கள் முறையிட்டனர்.

குடிநீர் பருக முடியாத அளவுக்கு மோசமாக இருப்பதாக புகார் கூறினார். இதையடுத்து அந்த ஊர்களில் மக்கள் பயன்படுத்தி வரும் குடிநீரை பாட்டிலில் வாங்கி அதனை குடித்துப் பார்த்தார். அதேபோல் தன்னுடன் சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்ட அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியருக்கு கொடுத்து அதை அருந்தச் சொன்னார்.
இதையடுத்து குடிநீர் பிரச்சனையை 20 நாட்களுக்குள் முற்றிலும் சரி செய்து கொடுக்க வேண்டியது எனது பொறுப்பு என இரண்டு கிராம மக்களிடமும் கனிமொழி உறுதியளித்தார். இதனால் ஹேப்பியான கிராம மக்கள் அவரை கொண்டாடி நன்றி தெரிவித்தனர்.
ஆன் தி ஸ்பாட்டிலேயே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை அழைத்துப் பேசி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பறந்தன. இதேபோல் சவலாப்பேரி, ஆசுர், காப்புலிங்கம்பட்டி என பல கிராமங்களுக்கு அவர் சுற்றுப்பயணம் சென்று மக்கள் களம் நிகழ்ச்சியை முன்னெடுத்து வருகிறார்.
வாரத்திற்கு மூன்று நாட்கள் வரை அவர் மக்கள் களம் நிகழ்ச்சியை தூத்துக்குடி தொகுதியில் நடத்துகிறார். லோக் அதாலத் மூலம் உடனடி தீர்வு வழங்கப்படுவது போல் மக்கள் களம் மூலம் கோரிக்கைகள், பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு வழங்கி வருகிறார் கனிமொழி.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications