தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளாவில் ராகுல் போட்டியிட்டால்.. தோல்வி தான்.. தமிழிசை ஆருடம்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தேர்தலுக்கு முன்னரே, காங்கிரஸ் தமது தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டதாக பாஜக வேட்பாளரும், தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சவுந்திர ராஜன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சீத்தாராம் யெச்சூரி ஆதரவு தரும் நிலையில், கேரளாவில் ராகுல் காந்தியை தோற்கடிப்போம் என பினராயி விஜயன் கூறி வருகிறார் என்றார்.

LokSabha Elections 2019: If Rahul contest in Kerala, will defeat Says Tamilisai

ராகுல் ஏன் கேரளாவில் போட்டியிட வேண்டும் என்று கேள்வி எழுப்பியதோடு, வரும் தேர்தலில் பா.ஜ.க. 300 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், தூத்துக்குடித் தொகுதியை நன்கு ஆராய்ந்த பின்னரே பா.ஜ.க., தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்தார்.

என் பிணத்தின் மீது ஏறிப் போய் ஸ்டெர்லெட்டை திறந்துக்கங்க.. நாம் தமிழர் வேட்பாளர் ஆவேசம் என் பிணத்தின் மீது ஏறிப் போய் ஸ்டெர்லெட்டை திறந்துக்கங்க.. நாம் தமிழர் வேட்பாளர் ஆவேசம்

நிறைவேற்ற முடியாத திட்டங்களை பாஜக அறிவித்துள்ளதாக திமுக வேட்பாளர் கனிமொழி குறை கூறியுள்ளார். நிறைவேற்ற முடியாத திட்டங்களை நிறைவேற்றித் தருவது தான் பா.ஜ.க. என்றும் தமிழிசை சிரிப்புடன் தெரிவித்தார்.

இதற்கிடையே, பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து , பாஜக தேசியச் தலைவர் அமித் ஷா மற்றும் முதலமைச்சர் பழனிசாமி நாளை வாக்கு சேகரிக்க உள்ளனர்.

English summary
Rahul , Why are you contesting in Kerala: Tamilisai question
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X