பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ரெடி.. அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடுத்த உறுதி!
தூத்துக்குடி: உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த பள்ளிக் கல்வித்துறை தயாராக உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக தூத்துக்குடி வந்த அவருக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் திருக்கோவிலுக்கு வந்த அவருக்கு திருக்கோவில் சார்பாக மாரியாதை அளிக்கப்பட்டது.

அன்பில் மகேஷ் பேட்டி
சுவாமி தரிசனத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்த திமுக ஆட்சியில்தான் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திட்ட பணிகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும், இது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தார்

முதலமைச்சரின் முடிவின்படி நடவடிக்கை
தமிழக அமைச்சர்கள் அனைவரும் அவரவர் துறையில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள் என கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாதம் தோறும் தமிழக முதல்வர் மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார் எனவும், அதன்படி ஓமிக்கிரான் பாதிப்பைப் பற்றி முதல்-அமைச்சர் எடுக்கும் முடிவுகளின் படி நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை தயாராக உள்ளது என தெரிவித்தார்.

மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தயார்
மேலும் உலக சுகாதார மையம் மற்றும் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தயாராக உள்ளதாகவும், எப்போது அறிவிப்பு வெளியிட்டாலும் அதனை சிறப்பான முறையில் நிறைவேற்ற தானும் துறை சார்ந்த அதிகாரிகளும் தயாராக உள்ளதாகவும், தற்போது வரை பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
Recommended Video

பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு
பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் இருந்து பெற்றப்பட்ட மனுக்கள் மற்றும் புகார்களின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பழுதடைந்த பள்ளி கட்டடங்கள் குறித்த அறிக்கையை மாவட்ட வாரியாக கணக்கெடுத்து வருவதாகவும்,முழுமையான அறிக்கை கிடைத்த பிறகு அறிக்கையின் படி போதிய நிதி ஒதுக்கீடு செய்து சேதமடைந்த கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்..












Click it and Unblock the Notifications