கமல் என்ன ஜனாதிபதியா எதுவேனாலும் பேசுவதற்கு?.. ஐ.எஸ் அமைப்பிடம் கமல் பணம் வாங்கிவிட்டாரா?.. அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: ஐஎஸ் அமைப்பினரிடம் இருந்து கமல்ஹாசன் பணம் வாங்கிவிட்டாரா என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தூத்துக்குடியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.

அப்போது அவர் கூறுகையில் ஐ.எஸ் அமைப்பினரிடம் கமல் பணம் வாங்கிவிட்டாரா. தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது. ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிப்பிட்டு கமல் பேசியது தவறு.

இந்து கடவுள்

இந்து கடவுள்

இந்துக்களையும் இந்து கடவுள்களையும் வம்புக்கு இழுப்பதை சிலர் வேலையாக வைத்துள்ளனர். நான் நாக்கை அறுப்பேன் என கூறவில்லை. இப்படியே பிரிவினைவாதத்தை வளர்த்தால் மக்களாக பார்த்து நாக்கை அறுப்பார்கள் என்ற தொனியில்தான் பேசினேன்.

கட்சியை தடை செய்யுங்கள்

கட்சியை தடை செய்யுங்கள்

இந்து தீவிரவாதி என கூறிய கமல் மன்னிப்பு கேட்டால் எனது கருத்தை வாபஸ் பெறுவேன். கமலின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை விசாரிக்க வேண்டும். பிரிவினைவாதத்தோடு கமல் பேசுவதால் அவரது கட்சியை தடை செய்ய வேண்டும்.

இத்தாலி

இத்தாலி

கமல் பேச்சுக்கு ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ் மாநில தலைவர் கே எஸ் அழகிரி இந்தியாவில் இருக்க தகுதியற்றவர். அவர் இத்தாலிக்குத்தான் செல்ல வேண்டும்.

ஸ்டாலின்

ஸ்டாலின்

என்ன வேண்டுமானாலும் பேசுவததற்கு கமல்ஹாசன் இந்தியாவின் ஜனாதிபதியா, ஆளுநரா இல்லை தமிழகத்தின் முதல்வரா. தமிழகத்தில் மத நல்லிணக்கத்துடன் ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி நடத்தி வருகிறார். ஸ்டாலின் நிறம் மாறும் பச்சோந்தி.

முதல்வர் கனவில் ஸ்டாலின்

முதல்வர் கனவில் ஸ்டாலின்

ஸ்டாலின் முதல்வர் கனவில் மிதக்கிறார். வேண்டுமானால் அவரை வைத்து ஒரு படம் எடுக்கச் சொல்லி முதல்வர் வேடத்தில் நடிக்கட்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+