நாசரேத் தூய யோவான் பேராலய திருமண்டல தேர்தலில், டி.எஸ்.கே அணி மிகப்பெரிய வெற்றி! முழு பின்னணி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நாசரேத் திருமண்டல நிர்வாக தேர்தல்கள் குறித்து எழுந்த சட்ட சிக்கல்களுக்கு மத்தியில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படித் தேர்தல் நடவடிக்கைகள் விறுவிறுப்புடன் நடைபெற்றன. நேற்று முன்தினம் (09.11.2025), நடைபெற்ற திருமண்டல பெருமன்ற பிரதிநிதிகள் மற்றும் சேகரமன்றப் பிரதிநிதிகள் தேர்தலில், எஸ்.டி.கே. (STK) அணியினர் நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் அமோக வெற்றியை பெற்று, தங்கள் பலத்தை நிரூபித்துள்ளனர்.

Nazareth Tuticorin

உயர் நீதிமன்ற உத்தரவு

இந்தத் தேர்தல் நடவடிக்கைகளில் ஏற்பட்ட சிக்கல்களின் காரணமாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, கடந்த (27.10.2025) தேதியிட்ட உத்தரவின்படி, தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தின் நிர்வாகியாக நீதிபதி ஜோதிமணியை நியமித்தது. அவர் பொறுப்பேற்று கொண்டதைத் தொடர்ந்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்தத் தேர்தல் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கின.

தேர்தல் ஆரம்பம்

இந்த உத்தரவுக்கு இணங்க, புதிய தேர்தல் அட்டவணையின்படி, தேர்தல் நேற்று முன்தினம் (09.11.2025)ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்குத் தொடங்கி மாலை 5.00 மணி வரை, திருமண்டலத்திற்குட்பட்ட அனைத்து ஆலயங்களிலும் அமைதியாகவும், ஜனநாயக முறைப்படியும் நடைபெற்றது.

திருமண்டலத்தின் மையப்பகுதியாக கருதப்படும் நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவின் முடிவுகள், எஸ்.டி.கே. அணிக்குச் சாதகமாகப் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. திருமண்டல பெருமன்றப் பிரதிநிதிகளுக்கு 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நிலையில், இந்த 6 இடங்களையும் எஸ்.டி.கே. அணியினர் முழுமையாகக் கைப்பற்றினர்.

எஸ்.டி.கே. அணி வெற்றி பெற்றவர்கள்

(பி.சி) பொதுப் பிரிவுவில் ஆண்ட்ரூஸ் ராக்லண்ட், ராஜசிங் சாலமோன், மாமல்லன், செல்வின் ஆகியோரும் பெண்கள் பிரிவில் ஸ்டெல்லா சாலமோனும், 35 வயதுக்குட்பட்டோர் பிரிவில், ஆண்ட்ரூஸ் ஐசக் ஆகியோரும் வெற்றி பெற்று இருக்கின்றனர்.

சேகரமன்ற பிரதிநிதிகளிலும் ஆதிக்கம்

இதேபோல், சேகரமன்ற பிரதிநிதிகளுக்கான தேர்தல் (பி.சி.) முடிவுகளிலும் எஸ்.டி.கே. அணியினரே தனிப்பெரும்பான்மையுடன் ஆதிக்கம் செலுத்தினர். பொதுப் பிரிவில் பர்னபாஸ் ஜெயக்குமார், பெல்ட்டன் ஆபிரகாம், சந்திரன், டேவின் சாலமோன், கெர்சோம் கிறிஸ்டியன், ஜாஸ்பர், ஜெபக்குமார் சாமுவேல், கேபா செல்வன், லேவி அசோக் சுந்தரராஜ், மாணிக்கராஜ் வில்சன், நிர்மல்சிங் பொன்குமார், புஷ்பராஜ், தனசிங், ராஜேந்திரன் ஆகிய 14 பேர் வெற்றி பெற்றனர். பெண்கள் பிரிவில் ஏஞ்சலின் ராஜேஷ், ஜோஸ்பெல் கெனல்வி, லில்லி ஜெயக்குமார் ஆகியோரும், இளையோர் பிரிவில் ஜெபின் ஜேம்ஸ் கிருபஸ், ஜெஃபி ஐசக், லிவிங்ஸ்டன் பிரதீப் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

டி.எஸ்.எப். அணி

இந்த சேகரமன்ற பிரதிநிதிகள் தேர்தலில், டி.எஸ்.எப். அணியை சேர்ந்த ரஞ்சன் மற்றும் செல்வின் மட்டுமே பொதுப் பிரிவில் வெற்றி பெற முடிந்தது. ஒட்டுமொத்தமாக, நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் நடைபெற்ற முதற்கட்டத் தேர்தலில் எஸ்.டி.கே. ராஜன் அணி சார்பில் போட்டியிட்ட 25 பேர் பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ளனர்.

அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்வு

நாசரேத் பேராலயத்தில் கிடைத்திருக்கும் இந்த திட்டவட்டமான வெற்றி, எஸ்.டி.கே. அணியின் ஆதரவாளர்களுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. இந்த முதற்கட்ட தேர்தலைத் தொடர்ந்து, எஞ்சியிருக்கும் முக்கிய நிர்வாக பதவிகளுக்கானத் தேர்தல்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தல் முடிவுகள், திருமண்டலத்தின் வருங்கால நிர்வாக போக்கை தீர்மானிக்கும் முதல் மணியோசையாக ஒலித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+