Nellai Kavin: கண்ணில் மிளகாய் பொடியை தூவி கொடூரமாக கவின் கொல்லப்பட்டுள்ளார்.. திருமாவளவன் பரபர பேட்டி
தூத்துக்குடி: நெல்லையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட கவினின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் ஆறுதல் தெரிவித்துள்ளார். கவினை குறிப்பிட்ட இடத்துக்கு வரவழைக்கு திட்டமிட்டு கொலை செய்ததாக தெரிவதாவும், மிளகாய் பொடியை தூவி கவினை கொடூரமாக கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட கவினின் குடும்பத்திற்கு உரிய நீதி, பாதுகாப்பை வழங்க திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடியை சேர்ந்த ஐடி என்ஜினீயர் கவின் செல்வகணேஷ் (வயது 28) கடந்த 27 ஆம் தேதி நெல்லை பாளையங்கோட்டையில் சுர்ஜித் என்பவரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். பட்டியல் இனத்தை சேர்ந்த கவின் தனது அக்கா சுகாஷினியிடம் பேசி வந்ததாலும், இனிமேல் பேசக்கூடாது என்று சொல்லியும் அவர் கேட்காததாலும் பாளையங்கோட்டைக்கு வர வைத்து கொன்றதாக கூறப்படுகிறது.

இந்த ஆணவக் கொலை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சுர்ஜித்தின் தாய், தந்தைகள் இருவரும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் என்பதால் என் மகனை நம்ப வைத்து கொலை செய்ததாக கவினின் உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் தான் என் மகனை வரவைத்து திட்டமிட்டு என் மகனை கொன்றுள்ளதாகவும், சுர்ஜித்தின் தாய், தந்தை இருவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் கவினின் உடலை வாங்க மறுத்து 4 வது நாளாக போராட்டம் செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே சுர்ஜித்தின் தாய், தந்தை இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தொடர்ந்து தந்தை சரவணன் கைது செய்யப்பட்டார். மேலும் சுர்ஜித் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் குண்டாஸ் சட்டமும் பாய்ந்தது. தொடர்ந்து இந்த வழக்கானது சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் கவினின் செல்போனும் சிபிசிஐடி போலீசார் கைப்பற்றி விசாரணைய தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் கவினின் குடும்பத்தினரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். கவினின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து பேசிய திருமாவளவன், கவினை திட்டமிட்டு கொன்றது தெரிய வருகிறது. அவர்கள் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்துகிறேன் என்று கூறினார்.
மேலும், கவினை வேண்டும் என்றே தனியாக வர வைத்து, கண்ணில் மிளகாய் பொடியை தூவி கொடூரமாக கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட கவினின் குடும்பத்திற்கு உரிய நீதி, பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications