யார் தீக்குளித்தாலும் ஆளுநரை மாற்ற முடியாது.. தமிழிசை சௌந்தரராஜன் தடதட!
தூத்துக்குடி: "யாரும் தீக்குளிப்பதனால் ஆளுநரை மாற்றிவிட முடியாது, ஆளுநரை குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் நினைத்தால் மட்டும்தான் மாற்ற முடியும்" என தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார் தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். பின்னர் திருச்செந்தூரில் சுப்ரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய தமிழிசை சௌந்தரராஜன். பிரதமர் மோடி வலிமையாக நடை போட்டு வருகிறார். அவரை யாரும் அசைக்க முடியாது. அனைவருக்கும் ஒரே சட்டம் தான் இருக்க வேண்டும். அனைவரும் சமமாக இருக்கத்தான் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டது. முத்தலாக் தடை சட்டத்தால் இஸ்லாமிய சகோதரிகள் மிகவும் சந்தோசமாக உள்ளார்கள்.
யாரும் தீக்குளிப்பதனால் ஆளுநரை மாற்றிவிட முடியாது. ஆளுநரின் கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்ள வேண்டும். அனைவருக்கும் கருத்துரிமை உள்ளது. யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம். ஆளுநரை குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் நினைத்தால் மட்டும்தான் மாற்ற முடியும்" எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என்.ரவி திமுக அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில் மதுரை மானகிரி பகுதியை சேர்ந்த ஆவின் திமுக தொழிற்சங்க தலைவரான கணேசன் என்பவர் ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்ற வேண்டும் என்றும், அவ்வாறு மாற்றாவிட்டால் 28ஆம் தேதி மதுரையில் தீக்குளிப்பேன் என்றும் போஸ்டர் ஒட்டியிருந்தார்.
இந்நிலையில் இன்று காலை கருணாநிதி சிலை முன்பாக காரில் வந்து இறங்கிய திமுக நிர்வாகி கணேசன் திடீரென தான் வைத்திருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி உடலில் தண்ணீரை ஊற்றி குளிக்க வைத்து பின்னர் கைது செய்தனர்.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications