"ரொம்ப எதிர்பார்த்து காத்திருந்தோம்.. ஆனால் முதல்வர் ஏமாற்றிவிட்டார்!" எதை சொல்கிறார் அண்ணாமலை
தூத்துக்குடி: தமிழ் மொழி இணைப்பு மொழியாக்குவது குறித்தும் முதல்வரின் புத்தாண்டு வாழ்த்து குறித்தும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தூத்துக்குடி மாவட்டம் கவா்னகிரியில் நாளை வீரன் சுந்தரலிங்கம் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்றே கவா்னகிரி வீரன் சுந்தரலிங்கம் மணி மண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது பேசிய அண்ணாமலை, தமிழ் மொழி, சித்திரை தமிழ் புத்தாண்டு என பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை
அங்குச் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "பெயர் மாற்றத்திற்குப் பிறகு, தேவேந்திர குல வேளாளர் மக்களின் முழு ஆதரவை பாஜக பெற்றுள்ளது. நமது முதல்வர் ஒரு விஷயத்தில் இரும்புப் பிடி பிடித்து நின்று கொண்டிருக்கிறார். மக்களுடைய கருத்துக்களைக் காதில் கொள்வது கிடையாது. இஸ்லாமிய, கிறிஸ்தவ, இந்து என அனைத்து சமுதாய மக்களுக்கும் அன்பைப் பரிமாறும் வாழ்த்துக்களைப் பிரதமர் மோடி தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

மக்கள் காத்திருந்தனர்
நேற்று கூட மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர், முதல்வர் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து சொல்வார் என்று. ஆனால், முதல்வர் வாழ்த்து சொல்லாதது வருத்தமளிக்கிறது. மக்களின் மனது வேறு மாதிரி உள்ளது. முதல்வரின் மனது வேறு மாதிரி உள்ளது. அமித்ஷா ஒரு நிகழ்வில் பேசும்போது இந்தியாவில் மக்கள் அதிகம் பேசும் மொழி இந்தி மொழி என்று சென்செக்ஸ் அடிப்படையில் தெரிவித்திருந்தார். அதிகமாகப் பேசுகின்ற இந்தி மொழி இணைப்பு மொழியாக இருப்பதில் தவறில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

தமிழ் இணைப்பு மொழி
தமிழ் மொழி இணைப்பு மொழியாக இருந்தால் நாம் அனைவரும். சந்தோஷப் படுவோம். ஆனால், தமிழ் மொழி இணைப்பு மொழியாக வர வேண்டும் என்றால் இந்தியாவில் அதிக இடங்களில் தமிழ் மொழி பேசு படவேண்டும். ஏஆா். ரகுமான் தெரிவித்த கருத்தில் எந்தவித தவறும் இல்லை. தமிழ் மொழியை இணைப்பு மொழியாக்க மாநில அரசுக்கு நாங்கள் சில கருத்துக்களைத் தெரிவித்து இருந்தோம். இது குறித்து அவர்கள் இன்னும் வாய் திறக்கவில்லை.

தமிழ் மொழி
நிச்சயம் ஒரு காலத்தில் நாடு முழுவதும் அதிகம் பேசுகின்ற மொழியாகத் தமிழ் மாறும். அப்போது தமிழ் இணைப்பு மொழியாக வரும்" என்று அவர் தெரிவித்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, டெல்லியில் பேசிய அமித் ஷா, ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை இணைப்பு மொழியாகப் பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாகச் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குத் தமிழ் தான் இந்தியாவில் இணைப்பு மொழி என்று இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் தெரிவித்துக் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications