அடுத்தடுத்து தூக்கப்படும் பாஜக நிர்வாகிகள்.. தூத்துக்குடி நிர்வாகி கைது.. கொதிக்கும் தமிழக பாஜக!
தூத்துக்குடி: நேற்று காலை பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்ட சமூக ஊடக பிரிவு செயலாளர் செல்வ பாலன் என்ற இளைஞரை கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாக பதிவிட்ட தூத்துக்குடி பாஜக நிர்வாகி செல்வ பாலன் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில் கூறியுள்ளதாவது: "நேற்று காலை பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்ட சமூக ஊடக பிரிவு செயலாளர் செல்வ பாலன் என்ற இளைஞரை கைது செய்துள்ளது அம்மாவட்ட காவல் துறை.முகநூலில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து கேலிசித்தரம் (கார்ட்டூன்) பதிவிட்டதால் இந்த நடவடிக்கை என கூறுகிறது நிர்வாகம்.
எதிர்க்கட்சியாக இருந்த பொது இந்த தவறுகளை நியாயப்படுத்தி மலிவு அரசியல் செய்த திமுக விற்கு ஆளும் கட்சியாக உள்ள போது இது போன்ற கைது நடவடிக்கையை எடுக்க தகுதி உள்ளதா என்பதே நம் கேள்வி.
கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ம் தேதி கார்ட்டூனிஸ்ட் பாலா என்பவர் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், ஆட்சியர் உருவங்களை கேலிச்சித்திரமாக பதிவு செய்ததால் கைது செய்யப்பட்டார்.
ஆனால், அன்றைய எதிர்க்கட்சி தலைவரும், தி மு க தலைவருமான திரு.ஸ்டாலின் அவர்கள்,"கருத்து சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் ஆகியவை ஜனநாயகத்தின் அடிப்படைகளில் ஒன்று. அதை நசுக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் திமுக அதை வன்மையாக கண்டிக்கிறது. கார்ட்டூனிஸ்ட் பாலா கைது சர்வாதிகார நடவடிக்கை''. என்று கண்டித்ததை நினைவூட்ட விரும்புகிறேன்.
எதிர்க்கட்சியாக இருக்கும் போது கருத்து சுதந்திரதிற்காக குரல் கொடுத்தவர் இன்று ஆளும் கட்சியாக இருக்கும் போது கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெரித்து சர்வாதிகாரியானது ஏன்?" இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
பாஜக ஐடி விங்க் நிர்வாகிகள் பலரும், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாக கருத்துக்கள் வெளியிட்டதாக அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். போலியான செய்திகள் வெளியிட்டதாக சிலரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பாஜக ஐடி விங் நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட விவாகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை












Click it and Unblock the Notifications