சூசை வீட்டுக்குள்ள போன ஸ்டாலின்.. "கனிமொழி உங்க வீட்டு பொண்ணு, மறந்துடாதீங்க".. பூரித்த தூத்துக்குடி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: இன்றைய தினம் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அந்தவகையில், லயன்ஸ் கிளப் பகுதியில் நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்து வருகிறார்.. அந்தவகையில், தூத்துக்குடியில் சிந்தலக்கரையில் முதல்வர் பங்கேற்கும் பொது கூட்டம் இன்று நடக்க போகிறது..

Thoothukudi Chief Minister campaigned for Kanimozhi MP and MK Stalin drank tea at fisherman Soosai house in Tuticorin

தூத்துக்குடி: அதில் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி மற்றும் ராமநாதபுரம் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கே.கனி ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள போகிறார்..

முன்னதாக, காமராஜர் மார்கெட் பகுதிகளில் வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் இன்று காலையிலேயே வாக்கு சேகரிக்க துவங்கினார். நகர காய்கறி மார்க்கெட்டுக்குள் நுழைந்து, திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக அங்குள்ள வியாபாரிகள் மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

பாட்டி: அப்போது ஒரு பாட்டி, முதல்வர் ஸ்டாலினை நோக்கி அழுதுகொண்டே வந்து, காய்கறி வாங்குவதற்காக வைத்திருந்த 1,500 ரூபாய் பணத்தை எங்கேயோ தொலைத்துவிட்டதாக சொல்லி கண்ணீர் விட்டு கதறி அழுதார்... இதைக்கேட்ட முதல்வர் ஸ்டாலின் அந்த பாட்டியை ஆறுதல்படுத்தினார்... அருகில் நின்றுகொண்டிருந்த திமுக எம்பி கனிமொழியும், பாட்டியை கட்டியணைத்து சமாதானப்படுத்தினார்.

அதன்பிறகு, திமுக சார்பில் அவருக்கு 2,000 ரூபாய் பணம் அப்போதே வழங்கப்படவும், அந்த பணத்தை பெற்றுக்கொண்ட பாட்டி, நன்றி கூறிவிட்டு சென்றார்.

லயன்ஸ் டவுன்: பிறகு, லயன்ஸ் டவுன் பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்றார் முதல்வர்.. அப்போது 7-வது தெருவில் உள்ள சூசை தப்பாசு என்ற மீனவர் வீட்டுக்கு சென்றார். அவருடன் எம்பி கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்டோரும் சென்றனர்.

மீனவர் சூசையின் குடும்பத்தினரிடம் நலம் விசாரித்து, அவர்களது குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவரது வீட்டில் டீ குடித்தவாறே, அவர்களிடம் வாக்கு கேட்டார்..

கனிமொழி: அப்போது முதல்வர் ஸ்டாலின் சூசை குடும்பத்தினரிடம் சொல்லும்போது, "கனிமொழி எம்பி. உங்கள் வீட்டு பிள்ளை.. அவரை நீங்கள் மறந்துடாதீங்க.. வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்..

பிறகு அங்கிருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு, சூசை வீட்டிலிருந்து கிளம்பி சென்றார் முதல்வர். இதற்கு பிறகு லயன்ஸ் டவுன் பகுதியிலிருக்கும் அத்தனை தெருக்களுக்கும் முதல்வர் சென்று வாக்கு சேகரித்தார். ஸ்டாலினை பார்த்ததுமே அந்த பகுதி மக்கள் பூரிப்படைந்தனர்.. முதல்வருடன் சேர்ந்து செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+