முதலிரவு "மதியம்" நடந்து.. அடுத்த நொடி? தூத்துக்குடி பார்க்கில் காதல், கல்யாணம், குவார்ட்டர், கட்டை
தூத்துக்குடி: குடும்ப பிரச்சனைகள் அல்லது திருமணம் தொடர்பான பிரச்சனைகள் காரணமாக தற்கொலைகள் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக தற்கொலைகள் பெருகுவதற்கு காரணம் குடும்ப வன்முறைகளே காரணம் என்று மனநல நிபுணர்கள் கவலையுடன் சொல்கிறார்கள். மேலும், தம்பதிகளுக்குள் புரிதல் இல்லாத காரணத்தினால், விவாகரத்துகளும் பெருகி வருகின்றன.. இந்நிலையில் தூத்துக்குடியில் நடந்த திருமணமும், அதையொட்டி நடந்த கைகலப்பும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ளது பண்டாரவிளை.. இங்கு வசித்து வருபவர் ஜெபவயலட்.,. இவருக்கு 25 வயதாகிறது.. இவருக்கு திருமணமாகிவிட்டது. ஆனால், கணவரை பிரிந்துவிட்டார்.. பிறகு 2வது திருமணம் நடந்தது.. அவரையும் பிரிந்து வந்துவிட்டார்.. இதுதொடர்பான விவாகரத்து வழக்கு தூத்துக்குடி கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக அடிக்கடி கோர்ட்டிற்கு வந்து செல்வார் ஜெபவயலட்..

கோர்ட்டுக்கு வந்தாலும், எப்போது விசாரணைக்கு அழைப்பார்கள் என்று தெரியாது.. அதனால், விசாரணைக்கு அழைக்கும்வரை, அருகே உள்ள பார்க்கில் சென்று பொழுதை கழிப்பது வழக்கம்...
லோடு மேன் வேலை
அப்படி அந்த பார்க்கில் பொழுதை கழித்து கொண்டிருந்தபோதுதான், மாரிக்கனி என்பவரும் அதே பார்க்கிற்கு வந்துள்ளார். தூத்துக்குடி குருவிமேடு பகுதியைச் சேர்ந்தவர் இந்த மாரிக்கனி.. இவருக்கும் 25 வயதாகிறது.. லோடு மேனாக வேலை பார்த்து வருகிறார்.. இவருக்கும் திருமணமாகிவிட்டது.. இவரும் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
கடந்த 9 நாட்களுக்கு முன்புதான், ஜெபவயலட்டும், மாரிக்கனியும் ஒருவரையொருவர் சந்தித்து கொண்டனர். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி நேற்று தூத்துக்குடி டவுனில் உள்ள கோயில் முன்பு இருவரும் கல்யாணம் செய்து கொண்டனர். பிறகு மாரிக்கனி, புதுமனைவி ஜெபவயலட்டை அழைத்துக் கொண்டு குருவிமேடு பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு சென்றார்.
திடீர் திருமணம்
வீட்டுக்கு போகும்போதே, அப்பகுதியில் டாஸ்மாக் கடையில் 3 குவார்ட்டர்களை வாங்கிக்கொண்டார்.. மதியம் முதலிரவை கொண்டாடியிருக்கிறார்கள்.. பிறகு 2 பேரும் தண்ணி அடித்துள்ளனர்..
மாரிக்கனி புதுமனைவியிடம் "எனக்கு 2 குவார்ட்டர், உனக்கு ஒரு குவார்ட்டர்" என்று சொன்னாராம்.. அதற்கு சரியென்று ஒப்புக் கொண்டுதான், புதுமனைவியும் மது அருந்தியிருக்கிறார்.. ஆனால், ஜெபவயலட், தன்னுடைய குவார்ட்டரை குடித்ததுடன், மாரிக்கனியின் குவார்ட்டர் மதுவையும் சேர்த்து குடித்துவிட்டாராம்.. இதனால் 2 பேருக்குள்ளும் தகராறு வெடித்துள்ளது.
ஒரே நாளில் வெடித்த தகராறு
"என்னுடைய குவார்ட்டரை நீ எப்படி எடுத்து குடிக்கலாம்? என்று மாரிக்கனி புதுமனைவி ஜெபவயலட்டிடம் சண்டை போட்டுள்ளார்.. பிறகு கீழே கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து சரமாரியாக அவரை தாக்கியும் உள்ளார்.. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜெபவயலட், ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார்.
இதையடுத்து வீட்டில் தவறி விழுந்து விட்டதாக கூறி அவரை, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மாரிக்கனி சேர்த்திருக்கிறார்.. இதுதொடர்பாக தென்பாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான், 9 நாட்களுக்கு முன்பு பார்க்கில் சந்தித்து காதல் வயப்பட்டு திருமணம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கொலை முயற்சி வழக்குபதிந்து மாரிக்கனியை போலீசார் கைது செய்தனர். இப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜெபவயலட்டுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காலையில் திருமணம் செய்து, மதியம் முதலிரவு கொண்டாடி, மாலையில் உருட்டுக்கட்டையால் அடிவாங்கி உசுருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் கல்யாண பெண்..!!












Click it and Unblock the Notifications