விஜய் கட்சி தவெகவில் இணைந்த தூத்துக்குடி ஸ்னோலின் தாய்.. எங்களுக்காக அரசியலுக்கு வந்தார் என உருக்கம்
தூத்துக்குடி: விஜய்யின் தமிழக வெற்றிக் கழத்தில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஸ்னோலின் தாய் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். விஜய் தங்களுக்காக வந்து நின்றதாகவும், எனவேதான் அவரது கட்சியில் இணைகிறேன் எனவும் அவர் பேட்டியளித்துள்ளார்.
தமிழக அரசியலில் சமீப காலமாக எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு பெரிய அளவுக்கு இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும், பெயருக்கு கூட அந்த அரசியலை பல விஷயங்களில் கட்சி செய்யவில்லை என்றும், பாஜக சர்ச்சை அரசியலை மட்டுமே செய்து வருகிறது எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். இப்படி இருக்கையில், நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் தனது அரசியல் கட்சியை அறிவித்தார். இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்தது.

அறிவிப்பை தொடர்ந்து, கடந்த மாதம் விக்கிரவாண்டியில் அவர் நடத்திய முதல் அரசியல் மாநாடு, தமிழக வெற்றிக் கழத்தின் கொள்கைகள் என்ன? அரசியல் வழிக்காட்டி யார்? எதிரிகள் யார்? என்பது குறித்து தெளிவுப்படுத்தியிருந்தார். மாநாட்டில் திராவிட கழகத்தை விமர்சித்திருந்த அவர், திமுக தங்களது அரசியல் எதிரி என்றும், பாஜக கொள்கை எதிரி என்றும் விளக்கியிருந்தார். அவரது கருத்துக்களுக்கும், கொள்கைகளுக்கும் பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பும், ஆதரவும் வந்தது.
மாநாட்டை தொடர்ந்து கட்சியின் செயற்குழு கூட்டத்தை கூட்டி சில தீர்மானங்களையும் அவர் நிறைவேற்றியிருந்தார். இது தமிழக அரசியலில் பேசு பொருளானது. இதனயடுத்து தற்போது கட்சியை பலப்படும் பணிகளை மேற்கொண்டிருக்கிறார். புதிய உறுப்பினர்களையும், மாற்றுக்கட்சியிலிருந்து வரும் நிர்வாகிகளையும் கட்சியில் இணைக்க மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி பல்வேறு மாவட்டங்களிலும் புதிய நிர்வாகிகளை இணைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

தூத்துக்குடியில் இன்று நடந்த இந்த நிகழ்வில் ஸ்னோலின் தாய் உட்பட 200க்கும் அதிகமானோர் தவெகாவில் இணைந்துள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற தூப்பாக்கிச்சூட்டில் ஸ்னோலின் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு நியாயம் கேட்டு பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் குதித்தனர். அப்போது நள்ளிரவு என்றும் பாராமல் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார். ரிஜினி போன்ற முக்கிய நடிகர்கள் தூத்துக்குடி போராட்டத்திற்கு எதிராக பேசியிருந்த நிலையில், விஜய் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்திருந்தது பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் இன்று ஸ்னோலின் தாய் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார். தனக்கும், தனது மகள் ஸ்னோலினுக்கும் விஜய் அவ்வளவு பிடிக்கும் என்றும், ஸ்னோலின் மறைவின் போது விஜய் வந்து ஆறுதல் தெரிவித்திருந்தார் என்பதாலும் இக்கட்சியில் இணைவதாக தாய் தனியார் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்











Click it and Unblock the Notifications