திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்! எத்தனை மணிக்கு நடைபெறுகிறது?
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை (ஜூலை 7, 2025) காலை 6:15 முதல் 6:50 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழும் இக்கோயிலில் நடைபெறும் இந்த விழாவிற்காக 6,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கும்பாபிஷேக ஏற்பாடுகள்
கும்பாபிஷேகத்தையொட்டி மூலவர், பார்வதி, கரிய மாணிக்க விநாயகர், வள்ளி, தெய்வானை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்குக் கோயில் உள்பிரகாரத்தில் யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ராஜ கோபுர அடிவாரத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள யாகசாலை மண்டபத்தில் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கி, தினமும் காலை, மாலை என ஒவ்வொரு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த இரண்டு நாட்களாக தங்க முலாம் பூசப்பட்ட சுவாமி மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்பட விமான கோபுர கலசங்கள் விமான தளத்திற்குக் கொண்டுவரப்பட்டு, அவற்றில் வரகு நிரப்பப்பட்டு மீண்டும் அந்தந்த சுவாமி விமானத்தில் பொருத்தப்பட்டன. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, சுவாமி சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு இன்று (ஜூலை 6) காலை 10ஆம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 11ஆம் கால யாகசாலை பூஜையும் நடைபெறுகின்றன. நாளை அதிகாலை 12ஆம் கால யாகசாலை பூஜை நடைபெறும்.
மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் மற்றும் அனைத்து பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பு
கும்பாபிஷேக ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பக்தர்கள் எந்தவித நெருக்கடியுமின்றி விழாவைக் காணும் வகையில் கோயில் கடற்கரையில் தடுப்பு வேலியிடப்பட்டுள்ளது. மேலும், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க 6,000 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
கும்பாபிஷேகத்தை பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் காணும் வகையில் ஆங்காங்கே எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் மீது புனித நீர் தெளிப்பதற்காக 20 ட்ரோன்கள் தயார் நிலையில் உள்ளன. பக்தர்கள் வசதிக்காகப் பல்வேறு ஊர்களில் இருந்து திருச்செந்தூருக்குச் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதற்காகத் திருச்செந்தூரில் 3 தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
30 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விமான தளத்தில் மடாதிபதிகள், நீதிபதிகள், அமைச்சர்கள், அதிகாரிகள், விஐபிக்கள் என 800 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். கோயில் வளாகம் மற்றும் நகர் முழுவதும் 1,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மொத்தம் 1,500 செவ்வாழை மரங்கள், 5,000 கரும்புகள், 1,500 இஞ்சி குலைகள், பலாப்பழங்கள், மாம்பழம், முந்திரிக் கொத்து, பாக்கு மரங்கள் ஆகியவற்றின் மூலம் கோயில் வளாகமும் உள் பிரகாரமும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோயிலில் உள்ள 137 அடி பிரம்மாண்ட ராஜகோபுரத்தில் நேற்று இரவு ஒளிக்காட்சி (லைட் ஷோ) காண்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications