திருச்செந்தூரில் க்யூட்.. "சோறு சாப்பிட்டியா தெய்வானை"? டாக்டர் கேட்டதுமே "ம்ம்"ன்னு தலையாட்டிய யானை
தூத்துக்குடி: திருச்செந்தூர் தெய்வானை யானை, பாகனின் நினைவிலேயே விழுந்து கிடந்த நிலையில், தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதையடுத்து, மண்டல இணை இயக்குநர் செல்வக்குமார், மாவட்ட கால்நடை மருத்துவ அலுவலர் மனோகரன் ஆகியோர் மருத்துவ பரிசோதனை செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை என்ற 26 வயது யானை வளர்க்கப்படுகிறது.. இந்த யானை கடந்த 18ம் தேதி யானைப் பாகன் உதயகுமார் (45) மற்றும் கோயிலுக்கு வந்த பக்தரும், முன்னாள் ராணுவ வீரருமான சிசுபாலன் (59) ஆகிய இருவரையும் மூர்க்கத்தனமாக தாக்கியது. இதில் அவர்கள் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

சோகம்: இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை தந்திருந்தது.. இதையடுத்து, பாகன் உதயகுமார் உயிரிழந்ததால் யானை தெய்வானை சோகத்துடன் சரிவர சாப்பிடாமல் இருந்தது.. பிறகு யானை மீது தண்ணீர் பீச்சியடித்து சாந்தப்படுத்தி, கம்பி வலை போட்ட அறைக்குள் கட்டிப்போடப்பட்டது. பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவதற்கும் பக்தர்களுக்கு தடையும் விதிக்கப்பட்டது.
ஒருநாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்த நிலையில், மறுநாள் சிறிதளவு பழம் சாப்பிட்டது. தெய்வானை யானை சோகத்துடனேயே காணப்பட்டது.. பாகன் உதயகுமார் நினைவிலேயே இருந்து வருவதாகவும், பாகன் இறந்த கிடந்த இடத்தையே உற்று உற்று பார்த்து வருவதாகவும் கூறப்பட்டது. இதனால் இரண்டு கால்நடை மருத்துவர்கள் 24 மணி நேரமும் யானையை கண்காணித்து வந்தனர்.
ஆசீர்வாதம்: பிறகு, யானை மீது தண்ணீர் பீச்சியடித்து சாந்தப்படுத்தி, கம்பி வலை போட்ட அறைக்குள் கட்டிப்போடப்பட்டது. பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவதற்கும் பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்த நிலையில், நேற்றுமுன்தினம் தான் வெறும் பழங்களை சிறிதளவு சாப்பிட்டுள்ளது. சம்பவம் நடந்து இத்தனை நாள் ஆகியும், இயல்பான உணவை இன்னும் சாப்பிடவில்லையாம். இந்த நிகழ்வுக்கு பிறகு, ஆக்ரோஷமாக இல்லையென்றாலும், தெய்வானை யானை சோகத்துடனேயே உள்ளது.. பாகன் உதயகுமார் நினைவிலேயே இருந்து வருவதாகவும், பாகன் இறந்த கிடந்த இடத்தையே உற்று உற்று பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
செயல்பாடுகள்: இதையடுத்து, மண்டல இணை இயக்குநர் செல்வக்குமார், மாவட்ட கால்நடை மருத்துவ அலுவலர் மனோகரன் ஆகியோர் மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது யானை உடல் நலம் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் உன்னிப்பாக கவனித்தனர்.
யானை இயல்பு நிலைக்கு திரும்பியிருப்பதால், படிப்படியாக உணவும் சாப்பிட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்... பாகன்களிடம் யானையின் செயல்பாடுகளில் ஏதாவது மாறுபாடு உள்ளதா? என்பதையும் கேட்டு தெரிந்து கொண்டனர். அப்போது பாகன்கள் சொன்னதை கேட்டு யானை கால்களை அசைத்தது.. திரும்பியது.. துதிக்கையை தூக்கிக் காட்டி பதிலளித்தது.. பாகன் சொன்ன அனைத்து கட்டளையையும் ஏற்று அதன்படியே தெய்வானை செய்தது.
பரிசோதனைகள்: பரிசோதனையை தொடர்ந்து பாகன்கள் செந்தில்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் யானையை குழாய் மூலம் தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டினார்கள்.. பிறகு, சோற்றை உருண்டையாக உருட்டி தெய்வானைக்கு தந்தனர்.. வழக்கம்போல் தெய்வானை அதனை சாப்பிட்டது.
எனினும், பக்தர்கள் மற்றும் வெளியாட்கள் யானை குடில் பக்கம் செல்லாதவாறு போலீசார், செக்யூரிட்டிகள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் 24 மணி நேரமும் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகிறார்கள்.. யானையிடம் அதிக சத்தம் கேட்காதவாறு பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
சாப்பிட்டியா: இன்றும்கூட, உதவி பாகன் செந்தில், யானையை குளிப்பாட்டி அலங்கரித்தார். பிறகு யானைக்கு வழக்கமாக கொடுக்கப்படும் உணவை வழங்கினார். பிறகு, நெல்லை வனக் கால்நடை மருத்துவர் மனோகரன், யானை தெய்வானையிடம் வந்து, "சாப்பிட்டியா? தண்ணீர் குடித்தாயா?" என்று கேட்டார்.. அதற்கு தெய்வானை அழகாக தலையசைத்து, பதில் சொன்னது.. தெய்வானை பதில் சொல்லும் காட்சிதான் இணையத்தில் வீடியோவாக வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications