திருச்செந்தூர் பீச்சில் பக்தர்களின் உடலை "பதம் பார்த்த" மர்மம்? தூத்துக்குடி அதிகாரிகள் சொல்வதென்ன?
தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் மீண்டும் ஜெல்லி மீன்கள் தென்பட்டதால், பக்தர்கள் தரப்பில் பதற்றம் தொற்றிக்கொண்டது. இதுகுறித்து கடல் மீன் வள ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தரப்பில் சொல்லப்படுவது என்ன?
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.. இப்படி கோயிலுக்கு வரும் பக்தர்கள், கோவில் முன்புறமுள்ள கடற்கரையில் புனித நீராடி சுவாமியை வழிபாடு செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

திருச்செந்தூர்: தற்போது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருவதால், வழக்கத்தைவிட, கூடுதலாக பக்தர்களின் வருகை காணப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாகவே, கடலில் புனித நீராடும்போது, அவர்களது உடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.. இதனால், கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களிடம் இதுகுறித்து பக்தர்கள் முறையிட்டனர். அப்போதுதான் ஜெல்லி மீன்கள் மீண்டும் கரை ஒதுங்குவது தெரியவந்துள்ளது.
மீண்டும் பாதிப்பு: கடந்த சனிக்கிழமையன்று, சுமார் 3 கிலோ எடை கொண்ட ஒரு பெரிய ஜெல்லி மீன் கரை ஒதுங்கியிருந்தது. அதனை கடற்கரை பகுதியிலேயே பணியாளர்கள் குழி தோண்டி புதைத்துவிட்டு, சிறிய அளவிலான ஜெல்லி மீன்களை கடலுக்குள் கொண்டுபோய் விட்டனர். எனினும் மறுநாள் மீண்டும் பக்தர்களின் உடலில் அரிப்பு தென்பட்டதால் திருச்செந்தூரில் பக்தர்களிடம் பதற்றம் தொற்றிக் கொண்டது.
கடந்த 2 நாட்களாக நீராடிய பக்தர்கள் மீது, ஜெல்லி மீன்கள் பட்டதில் உடலில் அரிப்பு ஏற்பட்டது. திருச்செந்தூரின் கடலோரத்தில் திடீரென கட்டுக்கடங்காமல் கரையொதுங்கிய ஜெல்லி மீன்களால் பயந்து போன பக்தர்கள்..
இதுகுறித்து திருக்கோயில் நிர்வாகம் மற்றும் கடலோர போலீசார் மூலம் மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு, களப்பணியாளர் பால் பாண்டி உள்ளிட்டோர் திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் காணப்பட்ட ஜெல்லி மீன்களை ஆய்வுக்கு கொண்டு சென்றனர்.. அந்த மீன்கள், தூத்துக்குடி மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
அழுவை சொறி: இதுகுறித்து கடல் மீன் வள ஆராய்ச்சி விஞ்ஞானி ரஞ்சித் சொல்லும்போது, "திருச்செந்தூர் கடற்கரையில் ஒதுங்கிய ஜெல்லி மீன்கள் "அழுவைசொறி" வகையை சேர்ந்ததாகும். இதற்கு கடிக்கும் திறன் கிடையாது. ஆனால், கொட்டும் திறன் கொண்டவை..
பவளப்பாறைகள் போல இவை கடலில் வாழும் ஓர் உயிரினமாகும். சிறியது முதல் பெரிய அளவு வரை காணப்படும்.. ஆனால் வருடத்துக்கு 2 முறை மட்டுமே இந்தவகை ஜெல்லி மீன்கள் கடற்கரைக்கு வரும்.. குறிப்பாக, வெயில் காலம் முடிகிற நேரத்திலும், மழைக்காலம் துவங்கும் நேரததிலும் இந்த வகை மீன்கள் கரை ஒதுக்கும்.. உடலில் பட்டால் ஊறல் எடுக்கும்.. இதற்கு உடனடியாக முதலுதவி எடுத்து கொண்டாலே போதும்.. மற்றபடி இந்த வகை ஜெல்லி மீன்களால் எந்தவகையான பாதிப்பும் ஏற்படாது" என்றார்.

ஆபத்தானவை: ஜெல்லி மீன் என்று அழைக்கப்பட்டாலும், இவை மீன் வகையறா கிடையாது.. கடல் உயிரினங்களிலேயே அழகானதும் இந்த ஜெல்லி மீன்கள்தான்.. ஆட்பறிக்கக்கூடிய உயிரினமும் இந்த ஜெல்லி மீன்கள்தானாம். இதனை சிலர் சொறி மீன் என்றும் சொல்வார்கள்.
எனினும், இப்போது ஜெல்லி வகை மீன்கள் அதிக அளவில் தென்பட்டுவருவதால், இதன் தன்மை குறித்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும், ஜெல்லி வகை மீன்களால் பக்தர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த, கோவில் வளாகத்திலுள்ள முதலுதவி சிகிச்சை மையத்தில் தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிப்பதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளதாகவும், கடற்கரையில் எச்சரிக்கை போர்டுகளும் வைக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications